ஜோதிடம்: வெள்ளியில் மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்கள் கவனத்திற்கு?

By Sakthi Raj Jun 13, 2025 10:51 AM GMT
Report

 பெண்கள் மூக்குத்தி அணிவது மிக சிறந்த பலனைக்கொடுப்பதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. அதனால், ஒரு குறிப்பிட்ட வயதில் பல பெண்கள் மூக்குத்தி அணிந்து கொள்கிறார்கள். அப்படியாக, பெண்கள் வெள்ளியில் மூக்குத்தி அணியலாமா? அவ்வாறு அணியும் பொழுது அவர்களுக்கு நடக்கும் நன்மைகள் பற்றிப் பார்ப்போம்.

பெண்கள் வெள்ளி மூக்குத்தி அணியும் பொழுது அவர்களை நேர்மறை ஆற்றல் சூழ்கிறது. தீய எண்ணங்கள் மற்றும் கண்கள் கொண்டவர்களிடம் இருந்து அந்த வெள்ளி மூக்குத்தியானது பாதுகாக்கிறது.

அதே போல் ஜாதகத்தில் சந்திரனை பலப்படுத்த வெள்ளியில் மூக்குத்தி அணியலாம். பெண்கள் பொதுவாக மூக்குத்தி அணிவது அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கொடுக்கும்.

ஜோதிடம்: வெள்ளியில் மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்கள் கவனத்திற்கு? | Benefits Of Wearing Silver Nosepin

அதிலும் வெள்ளி மூக்குத்தி அணியும் பொழுது அவர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைகிறார்கள். எந்த ஒரு விஷயம் செய்தாலும் அவை அவர்களுக்கு சாதகமாகவே அமைகிறது. மேலும் வெள்ளி மூக்குத்தி லட்சுமி தேவியின் அருளை பெற்றுக்கொடுத்து வீடுகளில் செல்வச்செழிப்பை உண்டு செய்கிறது.

உங்களுடைய வீட்டில் இந்த கெட்ட அறிகுறிகள் இருக்கிறதா? என்ன காரணம் தெரியுமா?

உங்களுடைய வீட்டில் இந்த கெட்ட அறிகுறிகள் இருக்கிறதா? என்ன காரணம் தெரியுமா?

நீண்ட காலமாக பெண்கள் திருமணத்தில் தடைகளை சந்தித்து கொண்டு இருந்தால் அவர்கள் வெள்ளி மூக்குத்தி அணியும் பொழுது அவர்களுக்கு திருமண தடை விலகி, விரைவில் திருமணம் நடப்பதாக சாஸ்திரங்கள் சொல்கிறது.

அதோடு திருமணம் ஆன பெண்கள் வெள்ளி மூக்குத்தி அணியும் பொழுது அவர்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்கிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US