தலையெழுத்தை மாற்றி எழுதும் சக்தி வாய்ந்த முருகர் பாடல்
பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் விதி என்று ஒரு கட்டளை உண்டு.அது அவர்களுக்கே தெரியாதே.நடப்பதும் நடப்பவை எல்லாம் இறைவன் எழுதிய விதி படியே.அதாவது இந்த நேரத்தில் இந்த நொடிப்பொழுதில் ஒரு பிறக்கவேண்டும் இல்லை மரணிக்க வேண்டும் என்று பிரம்ம தேவன் ஏற்கனவே எழுதி வைத்து விட்டார்.
அப்படியாக பலரும் இந்த விதியை மாற்றி எழுத முடியாது என்பார்கள். ஆனால் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அழிக்கவும், தலையெழுத்தை மாற்றி எழுதவும் முடியும் என்கிறார் அருணகிரிநாதர் சுவாமிகள்.
எப்படிப்பட்ட கடினமான சூழல் ஒருவருக்கு இருந்தாலும் கந்தர் அலங்காரத்தில் இருக்கும் ஒரே ஒரு பாடலை தினமும் பாடி வந்தால் தலையெழுத்து மாறும்.
இது பலரின் வாழ்க்கையில் நிஜத்திலும் நடந்துள்ளது. எப்படி மாறும் என்பதையும் இந்த பாடலில் அருணகிரி நாதரே குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான கஷ்டத்தில் இருப்பவர்கள் தினமும் கந்தர் அலங்காரத்தில் வரும், சேல் பட்டு அழிந்தது என துவங்கும் இந்த பாடலை பாடி, முருகப் பெருமானின் பாதங்களை சரணடைந்து,நெற்றியில் திருநீறு பூசி வந்தால் எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையும் வாழ்க்கையும் மாறும்.
முருகன் அருளால் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி, நன்மை, வளர்ச்சி மட்டுமே ஏற்படும். திருப்புகழை இயற்றிய அருணகிரி நாதர் இயற்றிய கந்தர் அலங்காரத்தில் வரும் இந்த பாடல் மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். எளிதில் அனைவருக்கும் அர்த்தம் புரியும் வகையில் அமைக்கப்பட்டதாகும்.
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
விளக்கம்
சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள வயல்கள் அழிந்துபோயின.மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால் அழிந்துபோயிற்று.
பெருமைதங்கிய மயில்வாகனத்தையுடைய உயிர் திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும் கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின. இவ்வுலகில் கந்தவேளின் திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால் எழுதப்பட்டிருந்த ['விதி' என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |