குலதெய்வம் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து வீட்டில் வைக்கலாமா? கூடாதா?

By Sakthi Raj Jul 27, 2026 06:09 AM GMT
Report

நம்முடைய இந்து மத வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் குலதெய்வத்தை மறந்து நாம் வழிபாடு மேற்கொள்கின்ற பொழுது நிச்சயம் நமக்கு முழுமையான இறை அருள் கிடைப்பதில்லை.

அதனால், தான் முன்னோர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். பலரும் வெளியூர்களிலிருந்து குலதெய்வம் வந்து வழிபாடு செய்கின்ற பொழுது அவர்கள் ஒருபிடி கைமண் எடுத்து வீட்டிற்கு செல்வதை நாம் பார்க்கலாம்.

காரணம், அந்த மண்ணில் தெய்வத்தின் அருள் சக்தி நிறைந்து இருப்பதாலும் அதனை நாம் வீடுகளுக்கு சென்று எடுத்து வைக்கின்ற பொழுது வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலகி அதிர்ஷ்டம் பெருகி நல்ல மாற்றங்கள் கிடைப்பதாக சொல்கிறார்கள்.

குலதெய்வம் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து வீட்டில் வைக்கலாமா? கூடாதா? | Can We Keep Kuladeivam Soil At Home

12 ராசிகளுக்கும் ஏற்ற விரதம் அதற்கான பலன் என்ன தெரியுமா?

12 ராசிகளுக்கும் ஏற்ற விரதம் அதற்கான பலன் என்ன தெரியுமா?

அந்த வகையில், வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர வீட்டில் குலதெய்வ கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வரலாமா? கூடாதா என்பதை பற்றி பார்ப்போம்.

ஒருவர் வாழ்க்கையில் திருமணத்தடை மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாமல் நீண்ட நாட்கள் அவர்கள் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். 

தலைக்கு மேல் கடன் சுமை தொழிலில் தடைகள் குடும்பத்தில் தீராத பிரச்சனைகள் என்று இருக்கின்ற வேளையில் இவர்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து கோவிலுக்கு சென்று அவர்கள் வழிபாடு செய்து ஒருகைப்பிடி மண் எடுத்து வந்து ஒரு வீடுகளில் வைத்து வழிபாடு செய்தால் நிச்சயம் இறைவனுடைய அருளால் நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலகும்.

குலதெய்வம் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து வீட்டில் வைக்கலாமா? கூடாதா? | Can We Keep Kuladeivam Soil At Home

நீங்கள் தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கும் நபரா? இந்த பதிவு உங்களுக்கு தான்?

நீங்கள் தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கும் நபரா? இந்த பதிவு உங்களுக்கு தான்?

இவ்வாறு குலதெய்வத்தின் மண்ணை வீட்டுக்கு எடுத்து வந்த பிறகு ஒரு சுத்தமான மஞ்சள் துணியில் வைத்து அதில் சிறிது விபூதி மற்றும் குங்குமம் சேர்த்து சிறிய கட்டாக கட்டி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்தால் அந்த மண்ணில் இருக்கக்கூடிய தெய்வீக சக்தி நம் வீட்டில் இருக்கக்கூடிய துன்பத்தை போக்கும். இவ்வாறு வீடுகளில் குலதெய்வ பிடி மண்ணை எடுத்து வந்து வழிபாடு செய்கின்ற பொழுது நம்முடைய வீடுகளில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எப்பேர்பட்ட தீய பாதிப்புகள் இருந்தாலும் அவை உடனடியாக விலகும் என்பது நம்பிக்கை.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US