சிவபெருமானை வழிபட்டால் என்ன நடக்கும்?
எம்பெருமான் ஐயன் ஈசனை வழிபடுவது என்பது சாதரண விஷயம் அல்ல.அவன் நாமம் நாவில் ஒலிக்க வேண்டும் என்றாலோ அவன் ஜோதி வடிவ தரிசனம் கிடைக்கவேண்டும் என்றாலோ எம்பெருமான் அருள் நிச்சயம் வேண்டும்.
அதே போல் அவனுக்குரிய திருவாசகம்,சிவபுராணம் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் காலம் அனுமதித்தால் மட்டுமே அதை நாம் படித்து உணர முடியும்.அப்படியாக ஒருவர் ஈசனின் மிக பெரிய பக்தர்.அவர் மனம் முழுவதும் எம்பெருமான் மட்டுமே இருக்கிறார்.
அப்படியாக அவர் தினமும் கோயிலுக்கு சென்று அங்கு பாடும் திருவாசகம் கேட்கும் பழக்கம் வைத்திருக்கிறார்.கேட்க கேட்க குறையாத அற்புதம் நிறைந்தவை திருவாசகம்.படிப்போருக்கு வரும் ஆனந்த கண்ணீற்கு உலகம் ஈடாகாது.
அதே போல் அந்த பக்தரும் திருவாசகம் என்னும் தேனுக்கு உருகுபவர்.அப்படியாக அவர் கோயிலில் திருவாசகம் கேட்டு வீட்டுக்கு வர மிகவும் கால தாமதம் ஆகும்.இதை கவனித்து வந்த அவரின் மனைவிக்கு ஒரே கோபம்.
பொறுத்து பொறுத்து போனவள் ஒரு நாள் அந்த சிவ பக்தர் மிகவும் கால தாமதம் ஆகி வீட்டிற்கு வர மனைவி கோபத்தில் ஆமா!அப்படி என்னதான் இருக்குதோ அந்த திருவாசக்த்தில,சரி இத்தனை நாள் போனீங்களே அந்த திருவாசகத்துல என்ன புரிஞ்சிகிட்டீங்க சொல்லுங்க பார்ப்போம்னு சொல்ல,அந்த சிவ பக்தர் எனக்கு திருவாசகத்தின் பொருள் புரியாது.
ஆனால் அதை தினமும் கேட்க நன்றாக இருக்கும்னு பதில் அளிக்கிறார்.அந்த பதிலால் மிகவும் கோபம் அடைந்த மனைவி முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க என்கிறார். அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்.
மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது.உடனே மனைவி அவளின் கணவனை பார்த்து இதோ நீங்க திருவாசகம் கேட்கப் போற லட்சணம் இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்.
தினமும் போறீங்க,தினமும் திருவாசம் கேக்கறீங்க,அர்த்தம் கேட்டா தெரில சொல்றிங்க.எதுக்கும் பிரயோஜனம் கிடையாது என்று புலம்பி தீர்த்தாள்.அதற்கு அமைதியாக அந்த மனிதர் நீ சொல்றது எல்லாம் சரிதான்.சல்லடையில் தண்ணீர் வேணா நிரப்ப முடியாம போகலாம்.
ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு நல்லா சுத்தமாயிடுச்சு.அதே போல தான் திருவாசகத்துல சொல்ற விஷயம் எனக்கு புரியாமல் போகலாம்.என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறதுன்னு சொன்னார்.
ஆக ஒரு விஷயம் புரிதல் காட்டிலும் அதனால் தெளிவு உண்டாகுவதே சிறந்து.அதை உணர்த்துபவர் தான் ஐயன் ஈசன்.
ஓம் நமச்சிவாய
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |