வீட்டில் அதிர்ஷ்டம் சேர இந்த சிலை வையுங்கள்
நாம் எவ்வளவு தூரமாக சுற்றுலா பயணம் அல்லது வேலைக்கு சென்றாலும் நாம் திரும்பி சேரும் இடம் வீடாகத்தான் இருக்கும்.அந்த வீடு நேற்மறை ஆற்றல் கொண்டு நிறைந்து இருக்க வேண்டும்.அப்பொழுது தான் நாம் சந்தோஷமாகவும் நம்பிக்கையாகவும் வாழ முடியும்.
அந்த வகையில் வாஸ்து ரீதியாக அதிர்ஷ்டம் பெறுக வீட்டில் சில மாற்றங்கள் மற்றும் பொருட்கள் வைப்பதுண்டு.அதில் மக்கள் மிக ஆர்வமாக வீட்டில் சிலைகள் வைத்து அலங்கரிக்க விரும்புவார்கள்.அப்படியாக அதிர்ஷ்டம் பெறுக வீட்டில் எந்தெந்த சிலைகள் வைக்கலாம் என்று பார்ப்போம்.
விநாயகர் சிலை:
ஒரு சிலைகள் வீட்டில் கட்டாயம் வைக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும்.அதில் ஒன்று தான் விநாயகர் சிலை.விநாயகர் சிலை வீட்டில் வைக்க எப்பேர்ப்பட்ட தடைகள் ஏற்பட்டாலும் அது விலகி விடும்.விநாயகர் யானையின் உருவ அமைப்பில் இருப்பதால் யானை சிலைகளும் வைக்கலாம்.
யானை சிலை வைக்க வீட்டில் உள்ள ராகு தோஷம் நீங்கி ஐஸ்வர்யம் உருவாகும்.எனவே, வெள்ளை அல்லது பித்தளையால் ஆன யானை சிலையை வீட்டில் வைத்திருந்தால், பண சிக்கல் தீர்ந்து மகிழ்ச்சியும் உண்டாகும்.
ஆமை சிலை:
அதே போல் அதிர்ஷ்டத்தின் உருவமாக ஆமை சிலை பார்க்க படுகிறது.ஆமைகள் விஷ்ணுவுடன் தொடர்புடையது என்பதால், ஆமை சிலைகளை வீட்டில் வைக்கலாம்.அப்படி ஆமை சிலை வீட்டில் வைக்கும் பொழுது கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் வைப்பதே சிறப்பாகும்.
குதிரை சிலை:
எல்லோருக்கும் வாழ்க்கையில் முன்னேறி அடுத்த கட்டம் நகர வேண்டும் என்று தான் ஆசை இருக்கும்.அப்படியாக வீட்டில் குதிரை சிலை வைக்கும் பொழுது நம் வாழ்வில் முன்னேற்றம் உருவாகும்.அதே போல் குதிரை சிலை வைக்கும் பொழுது தெற்கே நோக்கி கதவு அல்லது ஜன்னலை பார்த்தவாறு இந்த சிலையை வைக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |