2026: இன்று பங்குனி அமாவாசை.. முன்னோர்களின் அருள் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
அமாவாசை என்றாலே மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. அதிலும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்த அமாவாசையாக உள்ளது. இந்த அமாவாசையை வடமொழியில் சைத்ரா அமாவாசை என்று சொல்வார்கள். பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வரக்கூடிய கடைசி அமாவாசை இதுவாகும்.
அப்படியாக, 2026 ஆண்டு வரக்கூடிய கடைசி அமாவாசை மார்ச் 18 ஆம் தேதி அன்று அமைந்துள்ளது. அன்று நாம் முன்னோர்களின் அருளைப் பெறுவதற்கும் இறைவனின் அருளை பெறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

பங்குனி மாதம் அமாவாசை சிறப்புகள்:
பங்குனி அமாவாசை 2026 தேதி - மார்ச் 18 புதன்
அமாவாசை திதி துவங்கும் நேரம் - மார்ச் 18 காலை 08.29
அமாவாசை திதி முடியும் நேரம் - மார்ச் 19 காலை 07.29
பங்குனி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை அன்று நாம் நீர் நிலைகளில் நீராடினால் நம்முடைய பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை. அதோடு முன்னோர்களின் ஆசீர்வாதம் பெறுவதற்கு நமக்கு மிகவும் சிறப்பான நாளாக உள்ளது.
இந்த நாளில் செய்யக்கூடிய தர்ப்பணம் அவர்களுக்கு முக்தியையும், ஆத்ம சாந்தியையும் கொடுப்பதாக நம்பிக்கை. அதேபோல் பங்குனி மாத அமாவாசையில் சூரிய பகவான் வழிபாடு செய்வது நமக்கு ஆரோக்கியத்தில் ஒரு நல்ல முன்னேற்றத்தையும் வாழ்க்கையில் இருக்க கூடிய தடைகளையும் அவை நீக்குகிறது.
குறிப்பாக பங்குனி மாதத்தில் செய்யக்கூடிய பித்ரு தர்ப்பணங்கள் நேரடியாக பித்ருக்களால் ஏற்கப்பட்டு நமக்கு ஏற்பட்டுள்ள பித்ரு தோஷம், சாபம் இவை எல்லாம் நீக்கும் என்பது நம்பிக்கை.

பங்குனி அமாவாசை அன்று செய்ய வேண்டியவை:
பங்குனி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து புனித நீராடி அமாவாசை திதி துவங்கிய பிறகு சூரியனை சாட்சியாக கொண்டு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சூரிய பகவானுக்கு நீர் சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். முன்னோர்களின் பெயரில் தானம் செய்யலாம்.
குறிப்பாக தர்ப்பணம் கொடுத்த பிறகு ஏழை வயதானவர்கள், பிராமணர்கள் என யாருக்காவது கட்டாயம் முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும். அன்றைய நாள் காகத்திற்கு உணவு கொடுப்பது, பூனைக்கு பால் கொடுப்பது, பசு மாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது வெல்லம் கலந்த பச்சை அரிசி கொடுப்பது இவை எல்லாம் ஒருவர் தர்ப்பணம் கொடுத்ததற்கு இணையாக உள்ளது.
அதேபோல் மாலை நேரத்தில் அரச மரத்தடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடையவும் அவர்கள் மோட்சம் பெறவும் சிவன் ஆலயங்களுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நிச்சயம் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |