மீனத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்
ஜோதிட சாஸ்திரன் பிரகாரம் ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் எதிர்வரும் மே மாதத்தில் சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய நான்கு கிரகங்கள் மீன ராசியில் சங்கமிக்கிப்போகின்றது.அதன் விளைவாக சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.
சதுர்கிரக யோகதின் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் - சதுர்கிரக யோகத்தால் ரிஷப ராசியினருக்கு தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிலை ஆரம்பிக்க நினைப்போருக்கு அதற்கான யோகம் கூடிவரும்.
எதிர்பாராத பணவரவுகளால் மகிழ்ச்சி பெருகும். முன்னர் செய்து வைத்த முதலீடுகளால் அதிக லாபம் உண்டாகும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைப்பதுடன் மனதில் அமைதி உண்மாகும்.
திருமண வாழ்வில் இருந்த தடைகள் நீங்கி உறவுகளுடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பதற்காக வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம் -மிதுன ராசியினருக்கு இந்த சதுர்கிரக யோகத்தால் பணியிடத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்ப்பார்த்து காத்திருந்த சம்பளம் மற்றும் பதவி கிடைக்கும் யோகம் காணப்படுகின்றது.
சக ஊழியர்களிடமும் சமூகத்திலும் உங்களின் மரியாதை உயர்வடையும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு அமையும்.
மார்க்கெட்டிங், ஊடகம் மற்றும் எழுத்துத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
தனுசு - தனுசு ராசிக்காரர்கள் சதுர்கிரக யோகத்தால் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள்.
புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு அமையும். இதுவரை காலமும் இருந்துவந்த பணப்பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
நீண்ட நாள் கடன் தொல்லைகள் முடிவுக்கு வருவதுடன் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். இந்த காலகட்டத்தில் இவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
கும்பம் - கும்ப ராசியினர் சதுர்கிரக யோகத்தால் செல்வ செழிப்பு நிறைந்த ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கப்போகின்றார்கள்.
கடந்த கால முதலீடுகளால் எதிர்பாராத லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அடையும். எதிர்காலத்துக்கான சேமிப்புகளில் அதிக அக்கறை செலுத்துவார்கள்.
உறவுகளால் லாபம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும்.திருமண வாழ்க்கையில் மகிழ்சி பிறக்கும்.