சென்னை நித்ய தீப தருமச்சாலை.., தினசரி மூன்று வேளையும் அன்னதானம்
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை 1997ஆம் ஆண்டு முதல் கடந்த 28 ஆண்டுகளாக சமுதாய பணிகளை, உயிர் உபகாரப் பணிகளை, மனிதநேயப் பணிகளை செய்து வருகிறது.
தீபத்தின் பல்வேறு அறப்பணிகள் தடையின்றி தொடர்ந்து நடைபெற, திருவருள் பெருங்கருணையால், தினசரி 3 வேளையும் மக்கள் அமர்ந்து பசியாற தருமச்சாலை அமைந்துள்ளது.
மேலும், தவம் செய்ய தவச்சாலையும், உடற்பிணி நீங்க வைத்தியசாலையும், அறிவை ஞானம் ஆக மாற்ற பாடசாலையும், ஞான சபையும், அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையை தலைமை இடமாக கொண்டு தமிழகம் முழுவதும் 19 தருமச்சாலைகளின் மூலமாக தினசரி காலை பல்லாயிரக்கணக்கானோருக்கு கஞ்சி வார்த்தல் சேவை நடைபெற்று வருகிறது.
தினசரி நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், ஆதரவற்ற அன்பு உள்ளங்களுக்கு மனிதநேய உள்ளன்போடு, நூற்றுக்கணக்கான ஆன்மநேய அருளாளர்களின் அன்போடும், தயவோடும் எந்த வித பாகு பாடும் இல்லாமல், மூலிகை கஞ்சி வழங்கப்படுகிறது.
விடுமுறை நாட்களில் சமைத்த உணவுகளை வாகனத்தில் எடுத்து சென்று சாலை ஓரங்களில் இருபவர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |