சித்ரா பவுர்ணமி விரதம் இருக்கும் முறை
சித்ரா பவுர்ணமி அன்று வீட்டில் உள்ள பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர்.
சித்ரா பவுர்ணமி அன்று அதிகாலை எழுந்து நீராடி வாசலில் தெற்கு திசையில் வாயில் போன்ற அமைப்பில் படிக் கோலம் இடுகின்றனர்.
பூஜையறையில் மாவினால் சித்ர குப்தரின் உருவத்தினை வரைந்து பேப்பர் மற்றும் பேனாவை உருவத்தின் அருகே வைக்கின்றனர்.
பால் சேர்க்காமல் சர்க்கரைப் பொங்கல் மற்றும் பருப்பு பாயாசம் படைத்து விளக்கேற்றி தீப ஆராதனை காண்பிக்கப்படுகிறது.
பின்னர் வாழ்வில் செய்த பாவங்களைப் போக்குமாறும் இனி வரும் நாளில் பாவங்கள் செய்யாமல் இருக்க அருள் புரியுமாறும் வேண்டுகின்றனர்.
நிலையான செல்வம், நீடித்த ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.
வழிபாடு முடிந்த பின் முறத்தில் அரிசி, பருப்பு, காய்கறி, தட்சிணை ஆகியவற்றை வைத்து எளியவர்களுக்கு தானம் செய்கின்றனர்.
வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று சித்திர குப்தரின் வரலாற்றை படிக்கின்றனர்.
வழிபாடு முடிந்த பின் படிக்கோலத்தை அழிந்து விடுகின்றனர்.
காமதேனுவிடமிருந்து சித்திரகுப்தன் தோன்றியதால் விரதத்தில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |