நாளைய ராசி பலன் (04-04-2026)

Report

மேஷம்:

நீண்ட நாள் பிரச்சனைக்கு நல்ல தீர்வை காண்பீர்கள். தொலைத்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நெருங்கியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பீர்கள்.

ரிஷபம்:

இன்று சுப காரிய பேச்சுக்கள் வீடுகளில் நல்ல முடிவைப் பெறும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். சந்தோஷம் நிறைந்த நாள். உங்களுடைய திறமையை வெளிப்படும்.

மிதுனம்:

இன்று பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். ஒரு சிலருக்கு முக்கிய பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு பழைய பிரச்சனைகளை பற்றிய அதிக சிந்தனை உண்டாகும். இன்று தொழிலில் வேலை ஆட்களின் முழு ஒத்துழைப்பால் நல்ல லாபம் பெறுவீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் இன்று மற்றவர்களின் உணர்விற்கு மதிப்பளித்து நடப்பீர்கள். வீடு மற்றும் மனை வாங்குவதை பற்றி யோசனை செய்வீர்கள். மனதளவில் நம்பிக்கை உண்டாகும்.

கன்னி:

இன்று உங்களுடைய கருத்துக்களுக்கு குடும்பத்தில் மதிப்பளிப்பார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் மீது மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் நல்ல ஆதாயம் பெறுவீர்கள்.

2026: ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்

2026: ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்

துலாம்:

இன்று வேலை மாற்றம் உங்களுக்கு நினைத்தது போல் நடக்கும். புதிய முயற்சிகளில் நல்ல லாபம் பெறுவீர்கள். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

பொருளாதாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.

தனுசு:

உறவினர்களால் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது அதிக ஆர்வம் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த வேலையை செய்து முடிப்பீர்கள்.

2026: ஏப்ரல் மாதம் தூள் கிளப்ப போகும் தனுசு ராசியினர்.. முழு பலன்கள் இதோ

2026: ஏப்ரல் மாதம் தூள் கிளப்ப போகும் தனுசு ராசியினர்.. முழு பலன்கள் இதோ

மகரம்:

அரசு சார்ந்த விஷயங்களை நல்ல ஆதாயம் உண்டாகும். மனதளவில் புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரம் நாள்.

கும்பம்:

புதிய முயற்சிகளை எளிதாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மாணவர்கள் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். தொழிலில் உங்களுக்கு ஆதாயமான சூழல் உண்டாகும்.

மீனம்:

புதிய முயற்சிகளில் இருந்து வந்த மறைமுக தொல்லைகள் விலகும். மற்றவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் வழியாக நன்மை உண்டாகக்கூடிய நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US