நாளைய ராசி பலன் (23-02-2026)
மேஷம்:
இன்று உங்களுக்கு அரசு வேலையில் இருந்து வந்த தாமதங்கள் விலகும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உடலிலும் மனதிலும் ஒருவித சோர்வு காணப்படும். ரகசியங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள்.
ரிஷபம்:
உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுப காரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.
மிதுனம்:
உடல் ரீதியாக சந்தித்து வந்த சோர்வு விலகும். வீடுகளில் நீண்ட நாட்கள் சந்தித்து வந்த குழப்பங்கள் நீங்கும். வேலை பளு அதிகரித்தாலும் நினைத்ததை செய்து மகிழக் கூடிய நாள். தந்தை உடல் நிலையில் மட்டும் கவனம் வேண்டும்.
கடகம்:
வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். ஒரு சில வேலைகளை என்று நினைத்தது போல் செய்து முடிக்க முடியாத நிலை வரலாம். பெரிய அளவில் புகழும் பெயரும் தருவீர்கள். குழப்பங்கள் நிறைந்த நாள்.
சிம்மம்:
இன்று ஒருவரிடம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடத்தில் வீண் கோபத்தை தவிர்க்க வேண்டும். புதிய முயற்சிகள் புதிய அனுபவத்தை கொடுக்கக்கூடும்.
கன்னி:
உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தொலைந்த பொருட்களை கண்டுபிடித்து விடுவீர்கள். புதிய நட்புகளின் அறிமுகம் உங்களுக்கு சில மாற்றங்களை கொடுக்கும். அமைதியான நாள்.
துலாம்:
குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்வது மட்டுமே நன்மையை கொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது உங்களுக்கு ஆர்வம் உண்டாகும். வேலையில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும்.
விருச்சிகம்:
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சோர்வு விலகும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு உயரும். உடன் இருப்பவர்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகள் கைகூடும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்று சிலவேளை நடப்பதில் தாமதம் சந்திப்பீர்கள். வீடு மற்றும் இடம் வாங்குவதை பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்கள் வழியே உங்களுக்கு மகிழ்ச்சியும் இனிப்பான செய்திகளும் வந்து சேரும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்று உங்களின் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும் உடன் பிறந்தவர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்று அவர்களின் கனவு நிறைவேறும். நீண்ட நாட்கள் இழுபறையாக இருந்த பணிகள் ஒரு நல்ல முடிவை பெறும். நண்பர்களுடைய சந்திப்பு மிகவும் இனிமையாக அமையும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்று சமுதாயத்தில் ஒரு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |