இன்றைய ராசி பலன்(09-01-2026)
மேஷம்:
உங்களிடம் பகையை வளர்த்தவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் நீங்கள் சுயநலமாக முடிவெடுப்பது அவசியம். அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும்.
ரிஷபம்:
இன்று எந்த ஒரு சூழ்நிலையையும் நீங்கள் சமாளிக்கக்கூடிய திறன் உங்களுக்கு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு மிகவும் ஆதரவான சூழலை காணப்படும். மாணவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
மிதுனம்:
உறவுகளிடம் சற்று அனுசரித்து செல்வது அவசியம். வெளியே செல்லும் பொழுது பயணங்களில் கவனமாக இருங்கள். உடன் பிறந்தவர்களிடம் சில குழப்பங்களும் வாக்குவாதங்களும் வரலாம்.
கடகம்:
இன்று சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். ஒரு சிலருக்கு மருத்துவ செலவுகளும் மருத்துவமனை செல்லக்கூடிய நிலையும் வரலாம். மாணவர்கள் படிப்பில் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
சிம்மம்:
இன்று மனதளவில் நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிய நிறைய பதட்டத்தோடு காணப்படுவீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்வது அவசியம். மகிழ்ச்சியில் வீண் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்.
கன்னி:
இன்று உங்களுடைய சேமிப்பு தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் முடிந்தவரை நேர்மையாக பேசுங்கள். திருமண தொடர்பான விஷயங்களில் மன வருத்தம் வரலாம்.
துலாம்:
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகும். மாணவர்கள் உயர்கல்விக்கான ஆலோசனைகளையும் முக்கிய முடிவுகளையும் எடுப்பீர்கள். பொது இடங்களில் நீங்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
முடிக்கவே முடியாது என்ற விஷயத்தையும் நீங்கள் எளிதாக முடித்து விடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒரு சில முக்கிய ஆலோசனைகள் வழங்கலாம். கடன் யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம் வாங்கவும் வேண்டாம்.
தனுசு:
இன்று குல தெய்வ வழிபாடுகள் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதை பற்றி நண்பர்களுடன் ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு உண்டாகும்.
மகரம்:
புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானமாகவும் பதட்டமில்லாமலும் செய்ய வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
கும்பம்:
இனம் புரியாத சிந்தனைகள் உங்களுக்கு தோன்றும். எதிலும் பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களை சந்திப்பீர்கள். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.
மீனம்:
இன்று உங்கள் சிந்தனையிலும் செயலிலும் தெளிவாக இருக்க வேண்டும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். இன்று ஒரு சிலர் மிக உயர்ந்த ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ கூடிய நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |