நாளைய ராசி பலன் (17-01-2026)
மேஷம்:
வீடுகளில் உறவினர்களுடைய வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். ஒரு சிலருக்கு கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
ரிஷபம்:
ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். திடீர் பண வரவால் மகிழ்ச்கி உண்டாகும். தொழிலில் புகழ் அடையும் நாள்.
மிதுனம்:
பண விஷயங்களில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். திடீர் முடிவுகள் எடுக்கும் பொழுது கவனம் தேவை. நபர்களின் ஆலோசனை பெற்று நடப்பீர்கள். பெரிய நபர்களின் நட்புகள் கிடைக்கும் நாள்.
கடகம்:
மனதில் குடும்பம் தொடர்பான குழப்பம் உண்டாகும். தேவை இல்லாமல் வீண் வார்த்தைகள் பயன்படுத்தாதீர்கள். சிலருக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று மகிழ்ச்சியான நேரம் செலவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்:
குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். வாழ்க்கை துணையின் பெற்றோர்களிடம் சற்று நிதானமாக பேசுங்கள். முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலை வியாபாரத்தில் வரலாம்.
கன்னி:
உடன் பிறந்தவர்களை பற்றி புரிந்து கொள்ளும் நாள். எதிர்கால வாழ்க்கை பற்றிய மிக பெரிய குழப்பம் உண்டாகும் நாள். தந்தையின் உடல் நிலையில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
துலாம்:
குடும்பத்தினர் முழு ஆதரவையும் பெறுவீர்கள். சிலருக்கு தொழில் ரீதியாக சந்தித்த வந்த மன அழுத்தங்கள் குறையும். உங்களுக்கு உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும் நாள். மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்:
ஒரு சிலருக்கு வாழ்க்கையை பற்றிய வெறுப்பு வரலாம். மருத்துவ செலவுகள் குறையும் நாள். மதியம் மேல் குடும்பத்தில் திடீர் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் நாள்.
தனுசு:
குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவீர்கள். மனதில் அமைதி உண்டாகும். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். சிலருக்கு ஆன்மீக தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும். மன கவலைகள் விலகும்.
மகரம்:
இன்று உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்வதை குறைத்து கொள்ளுங்கள். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த சங்கடம் விலகும். உறவினர்கள் வழியாக தேவை இல்லாத பிரச்சனை வரலாம்.
கும்பம்:
திருமண வரன் பார்ப்பதில் சில தடைகள் வரலாம். மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வேலையில் இடம் மாற்றம் செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
மீனம்:
குடும்பத்தில் நற்செய்தி கிடைக்கும் நாள். உங்கள் வீடுகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |