நாளைய ராசிபலன் (01-07-2026)

By Sakthi Raj Jun 30, 2026 02:00 PM GMT
Report

மேஷம்:

இன்று வீடுகளில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். தேவை இல்லாத பேச்சு வார்த்தைகளால் மிகப்பெரிய அளவில் பிரச்சினைகளை சந்திக்கலாம். கவனச்சிதறல் உண்டாகும்.

ரிஷபம்:

இன்று வீட்டிற்கு விருந்தினர் வருகையால் குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மிதுனம்:

வேலைப்பளு அதிகரிக்கும். மருத்துவமனை செலவுகள் வரலாம். உடன் பிறந்தவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். சொத்து பிரச்சனைகள் விலகக்கூடிய நாள்.

12 ராசிகளில் யாருக்கு அதிக பிடிவாதம் அதிகம்..தெரியுமா?

12 ராசிகளில் யாருக்கு அதிக பிடிவாதம் அதிகம்..தெரியுமா?

கடகம்:

இன்று முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். வாங்கிய கடன்களை அடைக்க கூடிய யோகம் உண்டாகும். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையில் சாதனை செய்யக்கூடிய நாள்.

சிம்மம்:

வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உங்களுடைய வியாபாரம் தொடர்பாக முக்கிய ரகசியங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

கன்னி:

நீங்கள் வாழ்க்கை ரீதியாக முடிவெடுக்கும் பொழுது பெரியவர்களின் ஆலோசனை கேட்டு முடிவெடுப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும். பெற்றோர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.

துலாம்:

வேலை பளு அதிகரிக்கும். உங்களுக்காக நீங்கள் சில நேரத்தை செலவிட முயற்சி செய்வீர்கள். உங்களிடம் முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். வீடுகளில் இயந்திரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

உருவாகும் கேந்திர திரிகோண யோகம்.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

உருவாகும் கேந்திர திரிகோண யோகம்.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

விருச்சிகம்:

எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் உண்டாகும். கணவன் வழி சொந்தங்களிடம் கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் உதவியை பெறுவீர்கள். நன்மையான நாள்.

தனுசு:

குழந்தைகளை பற்றி புரிந்து கொள்வீர்கள். சொந்தங்களிடம் விலகி இருப்பது நல்லது. யாரிடமும் வாழ்க்கையின் உண்மை ரகசியத்தை பகிர்ந்து கொள்வதை தவிர்த்து விடுங்கள்.

மகரம்:

இன்று காலை முதல் விரக்தி நிலையில் இருப்பீர்கள். இறை வழிபாட்டில் மனம் அதிக ஆர்வம் செலுத்தும். தொழில் ரீதியாக முன்னேற்றம் கைக்கூடி வரும். நண்பர்களின் உதவியை பெறுவீர்கள்.

கும்பம்:

வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முன்னோர்கள் வழி சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:

இன்று நீங்கள் குழந்தைகளுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரலாம். தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் கவனம் உண்டாகும். குலதெய்வ வழிபாடுகளில் ஆர்வம் உருவாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US