நாளைய ராசிபலன் (17-06-2026)
மேஷம்:
உறவினர்கள் இடையே நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். சமூக பணிகளில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். தொழில் சார்ந்த வேலை வெற்றிகரமாக அமையும்.
ரிஷபம்:
புதிய முயற்சிகளால் தடைப்பட்ட காரியங்களை மீண்டும் முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்கும் யோகம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் அதிகரிக்கும்.
மிதுனம்:
குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். வெளிவட்டார நட்புகள் இடையே ஏற்பட்ட கசப்புகள் விலகும். சாதுரியமான பேச்சால் சாதிக்கும் நாள்.
கடகம்:
எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகளை பெறுவீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சகோதரர்களை விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். வேலையில் மறைமுக எதிரிகள் விலகிச் செல்வார்கள்.
சிம்மம்:
பொன் பொருள் சேர்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். சில விஷயங்கள் நல்ல முடிவை பெறும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். முதலீடு செய்யும் போது கவனம் வேண்டும்.
கன்னி:
வேலையில் எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். மனதில் தெளிவு பிறக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
அரசு சார்ந்த பணிகளில் உங்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கை துணையின் வழியே நல்ல ஆறுதலை பெறுவீர்கள். மாணவர்களுக்கு தெளிவும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். முயற்சி கைக்கூடும்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் ஆன்மீக வழிபாடுகளுக்கு சென்று வருவீர்கள். தந்தை வழி சொத்துக்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும் நாள்.
தனுசு:
மற்றவர்கள் தவறுகளை நீங்கள் சுட்டிக் காட்டுவதில் சற்று கவனம் வேண்டும். வாகனத்தை சரி செய்வீர்கள். உயர் அதிகாரிகளுடன் நல்ல நட்பு உருவாக கூடிய நாள். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.
மகரம்:
இன்று பெருந்தன்மையாக நடந்து கொள்வீர்கள். முகத்தில் புதுவிதமான சந்தோஷமும் பொலிவும் காணப்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் முடிவடையும்.
கும்பம்:
இன்று விருந்தினர்களின் வருகையால் மன மகிழ்ச்சி உண்டாகும். உடலில் இருந்து வந்த சோர்வு விலகும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். இழுப்பறியான பணிகளை செய்து முடிப்பீர்கள்.
மீனம்:
குடும்ப உறுப்பினர்கள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். நன்மையான நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |