நாளைய ராசிபலன் (18-06-2026)
மேஷம்:
எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்க சில தாமதமாகலாம். திடீர் பயணங்களால் அலைச்சலும் சோர்வும் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
ரிஷபம்:
உடன் பிறந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்களின் ஆலோசனையை கேட்டு குடும்பத்தில் நடப்பார்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்:
இன்று வேலை செய்யும் இடங்களில் அலைச்சலும் மனசோர்வும் உண்டாகலாம். தேவையில்லாத வாக்குவாதங்களை குடும்பத்திலும் வேலை செய்யும் இடங்களிலும் செய்யாதீர்கள்.
கடகம்:
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களை செய்ய வேண்டாம். வியாபாரம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும்.
சிம்மம்:
குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் வந்து செல்லலாம். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் பொழுது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி:
உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.
துலாம்:
உறவுகள் இடையே கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும். எளிதாக முடிக்க வேண்டிய வேலை சில காலதாமதம் ஆகலாம். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். அலைச்சல் உண்டாகும்.
விருச்சிகம்:
பயணங்கள் வழியே நீங்கள் புதிய அனுபவங்களை தெரிந்து கொள்வீர்கள். எதிர்மறை சிந்தனைகள் மனதில் சோர்வு உண்டாகலாம். ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் நன்மை உண்டாகும்.
தனுசு:
கணவன் மனைவியிடையே அனுசரித்து செல்வது அவசியம். காப்பீட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் உண்டாகும். உங்கள் மீது நம்பிக்கையில் சில தடுமாற்றங்களை சந்திப்பீர்கள்.
மகரம்:
பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
கும்பம்:
தாய்மாமன் வழியே நல்ல ஆதரவு பெறுவீர்கள். வேலையில் பதற்றம் இன்றி செயல்படுவீர்கள். திடீர் பணவரவு உண்டாகும். மறைமுக எதிரிகள் விலகிச் செல்வார்கள்.
மீனம்:
வருமானத்தை மேம்படுத்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். கலை சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |