நாளைய ராசி பலன் (16-03-2026)
மேஷம்:
இன்று தொழில் ரீதியாக நீங்கள் புதிய நட்புகளை சந்திப்பீர்கள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். வழக்கு தொடர்பாக இருந்த எதிரிகள் விலகி செல்வார்கள். பிள்ளைகள் மீது அன்பு உருவாகும்.
ரிஷபம்:
மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். மதியம் மேல் பிடித்த உணவுகள் சாப்பிட்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். தந்தை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.
மிதுனம்:
வேலை தொடர்பாக நீங்கள் வெளியூர் செல்ல நேரலாம். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். சொந்தங்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். அத்தை வழி உறவால் நன்மை உண்டாகும்.
கடகம்:
மனதில் சிறு சிறு குழப்பங்ககள் தோன்றி மறையும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். வீடுகளுக்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பண பிரச்சனை விலகும்.
சிம்மம்:
குடும்பத்தில் சிறு சிறு மனக்கசப்புகள் வந்து மறையும். காவல் பணியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.
கன்னி:
உடன் பிறந்தவர்களிடம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். சில பண பிரச்சனை வரலாம். குலதெய்வ வழிபாடுகளில் சிலர் கலந்து கொள்வீர்கள்.
துலாம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சில உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். சிலருக்கு திடீர் நெருக்கடிகள் வேலையில் வரலாம்.
விருச்சிகம்:
இன்று வேலை தொடர்பாக முக்கியமான முடிவுகள் எடுப்பதில் சில குழப்பங்கள் வரலாம். சிலருக்கு முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்புகளும் கிடைக்கும். மதியம் மேல் அமைதி உண்டாகும்.
தனுசு:
இன்று தாய் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். வெளிநாடு தொடர்பு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். தொழில் ரீதியாக உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். திருமண தொடர்பான பேச்சுக்களில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும் நாள்.
கும்பம்:
நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல மதிப்பு உயரும். உடன் பிறந்த சகோதரிகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். வருமானத்தில் இருந்து வந்த தடைகள் விலகும்.
மீனம்:
இன்று வீடுகளில் சிலருக்கு மனக்கசப்புகள் வரலாம். எதையும் தீர ஆராய்ந்து செயல்படுவது அவசியம் ஆகும். நண்பர்கள் மத்தியில் நீங்கள் குடும்ப விஷயங்கள் பகிரும் பொழுது கவனம் வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |