இன்றைய ராசி பலன்(07-05-2025)

Report

மேஷம்:

இன்று இவர்களுக்கு நேர்மறையான நாளாக அமைய போகிறது. ஒரு சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். நண்பர்களிடம் இடையே சிறு சிறு பிரச்சனைகள் உருவாகலாம். கவனம் தேவை.

ரிஷபம்:

குடும்பத்தினர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். தாய்மாமன் உறவால் ஆதாயம் உண்டு. சொந்த விஷயங்களை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அமைதி காக்க வேண்டிய நாள்.

மிதுனம்:

இன்று சமுதாயத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு பயணம் செல்ல நேரிடலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

கடகம்:

வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தினர் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. பொழுது போக்கு அம்சத்தில் உங்கள் கவனத்தை செலுத்துவீர்கள்.

சிம்மம்:

வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

கன்னி:

படிப்பு தொடர்பான விஷயங்களில் நல்ல தெளிவு பிறக்கும். உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் உண்டான பிரச்சனைகள் நல்ல தீர்வை பெரும்.

மோகினி ஏகாதசி 2025: பண கஷ்டங்கள் தீர சொல்ல வேண்டிய மந்திரங்கள்

மோகினி ஏகாதசி 2025: பண கஷ்டங்கள் தீர சொல்ல வேண்டிய மந்திரங்கள்

துலாம்:

இன்று உங்களுக்கு நண்பர்கள் ஆதாயமாக இருப்பார்கள். சிலரிடம் வீண் வாக்குவாதம் செய்யவேண்டாம். நீண்ட நாட்களாக கைக்கு வரவேண்டிய பணம் உங்கள் கைகளை வந்து சேரும்.

விருச்சிகம்:

தொழிலில் இருந்த தடைகள் விலகும்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை நீக்குவீர். புதிய முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

தனுசு:

 தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட சிக்கல் விலகும். பிள்ளைகள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். இறைவழிபாடு நன்மை தரும்.

மகரம்:

உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். திருவோணம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நன்மையாகும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.

கும்பம்:

வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும் என்றாலும், வரவு செலவில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மீனம்: 

குடும்பத்தில் உங்களுக்கு உண்டான மதிப்பு உயரும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். எதிரிகள் தொல்லை விலகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி செலவு செய்து மகிழ்வீர்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US