இன்றைய ராசி பலன்(07-01-2026)
மேஷம்:
இன்று தொழில் ரீதியாக நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நாள். எதிர்காலம் பற்றிய பயம் விலகும். சிலருக்கு புதிய நட்புகளின் அறிமுகத்தால் சில மன கசப்புகள் வரலாம்.
ரிஷபம்:
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையை தெளிவாக கையாள்வீர்கள். அத்தை வழி உறவால் ஏற்பட்ட மன சங்கடம் எல்லாம் விலகும். சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாள்.
மிதுனம்:
நெருங்கியவர்களிடம் தேவையில்லாத வெறுப்புகளை காட்டாதீர்கள். காதலில் ஒரு சில கசப்பான அனுபவம் வரலாம். பெற்றோர்கள் உடல் நிலையில் அக்கறை காட்ட வேண்டும்.
கடகம்:
கணவன் மனைவி இடையே ஒரு நல்ல புரிதல் உண்டாகும். தேவையில்லாமல் உங்களுடைய சொந்த விஷயங்களைப் பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை வேண்டும்.
சிம்மம்:
வியாபாரத்தை விரிவு படுத்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். நெருங்கிய சொந்தங்கள் வழியாக உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் நீங்கள் சந்தோஷமாக பழகுவீர்கள்.
கன்னி:
படிப்பு ரீதியாக இன்று நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்கக்கூடிய நாள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
துலாம்:
முக்கியமான நபரிடமிருந்து சட்ட ஆலோசனையை இன்று பெறுவீர்கள். அவசரமாக எந்த முடிவையும் எடுக்காமல் நிதானமாக எடுப்பது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
விருச்சிகம்:
ஒரு சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கக்கூடிய நிலை உருவாகும். எதிரிகள் தொல்லை விலகும்.
தனுசு:
பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்திற்காக ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்படலாம். சொத்து விவகாரங்களில் கவனம் வேண்டும்.
மகரம்:
மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு இன்று ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய நாள். தெரியாதவர்களிடம் இருந்து ஒரு நல்ல பாடம் தெரிந்து கொள்வீர்கள்.
கும்பம்:
குடும்பத்திற்காக இன்று நீங்கள் ஒரு முக்கியமான செலவு செய்யக் கூடிய நாள். அலுவலகத்தில் யாரிடமும் கோபமாக பேசாதீர்கள். தவறான நட்புகளிடம் இருந்து விலகி இருங்கள்.
மீனம்:
எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரம் செலுத்த முடியவில்லை என்று வருத்தம் வரலாம். இறைவழிபாட்டில் மனம் அதிக ஈடுபாடு செலுத்தும். அமைதியான நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |