(03-04-2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

By Sakthi Raj Apr 03, 2024 04:15 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு இன்று நீண்ட நாள் அவர்கள் நினைத்த காரியம் ஒன்று முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். பிற்பகல் மேல் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் எதுவாக இருந்தாலும் வெற்றிகள் உண்டாகும். எதிர்பார்த்த தகவல்கள வந்த சேரும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்கள் இன்று விவேகத்துடன் செயல்பட்டு எடுத்து காரியத்தை முடிப்பார்கள். நேற்றைய தினம் போல் நெருக்கடிகள் இல்லாமல் இன்று எடுத்த காரியங்கள் வெற்றி அடைவீர்கள்.  வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் நினைத்து லாபம் இன்று அவர்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களுக்கு இன்று சற்று கடினமான நாள் தான் எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் வந்தடையும். உதவி செய்வேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று பின்வாங்குவார்கள் .எதிர்பாராத நெருக்கடிகள் வந்து அடையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் மன உளைச்சல்கள் உண்டாகலாம். செய்யும் செயல்களில் தடையும் தாமதம் ஏற்படக்கூடும்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு இன்று நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த நல்ல வருமானம் வர வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கை துணை இன்று உதவிகரமாக இருப்பார்கள். இன்று உங்களுடைய விருப்பங்கள் எளிதாக நிறைவேறி குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசியினர்களுக்கு இன்று உடல்நிலை சீராகும் .துணிச்சலாக செயல்பட்டு எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள், குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி சந்தோஷம் நிலைக்கும். அரசியல்வாதிகள் நினைத்ததை இன்று சாதிப்பார்கள். செல்வாக்கு வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும் நாள்.

கன்னி

கன்னி ராசி நேயர்கள் உறவினர்களுடைய உதவியால் வரும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வீர்கள் குலதெய்வ அருளால் எந்த முயற்சிகள் எடுத்தாலும் வெற்றிகள் கிட்டும். பொருளாதார நிலை உயரும் வியாபாரத்தில் லாபம் வரும் தொழில் வருமானம் அதிகரித்து சங்கடங்கள் நீங்கும் நாள் குடும்பத்தில் மகிழ்ச்சிகள் உண்டாகும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு இன்று நீண்ட நாள் சங்கடம் விலகும் தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் ஒன்று வந்து சேரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நாள் ஒரு சிலருக்கு வாழ்க்கை துணை ஆதரவால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பார்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும் எதிர்கால பற்றிய சிந்தனைகள் வந்து செல்லும். உங்களுடைய செயல்களுக்கு சகோதரர்கள் மத்தியில் நல்ல உதவிகளும் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களுக்கு அவர்களின் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள் விருப்பங்கள் நிறைவேறி குடும்பத்தில் நல்ல பெயர் உண்டாகும். நண்பர்கள் உதவியாளர் வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள் .எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளை சமாளிப்பீர்கள் .இன்று சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

மகரம்

மகர ராசி நேயர்களுக்கு செயலில் தடுமாற்றம் ஏற்படும். வரவு ஒரு பக்கம் வந்தாலும் அதற்கேற்ற செலவுஏற்படும். ஆனால் சமாளித்துவிடுவீர்கள் மன குழப்பங்கள் ஏற்பட்டு மன உளைச்சல்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் செயல்களில் கவனம் தேவை. நினைத்ததை அடைய வேண்டும் என்று துணிச்சலுடன் செயல்படுவீர்கள் எதிர்பார்த்து வருமானம் வந்து சேரும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்கள் குடும்பத்தினருடன் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்திற்காக திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். முயற்சிகள் தடையும் தாமதமும் உண்டாகலாம். எதிர்பார்த்த வருமானம் வந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும்.

மீனம்

மீன ராசி நேயர்கள் இன்று அவர்கள் எதிர்பார்த்த பணம் வந்தடையும். புதிய நண்பர்களால் உங்கள் எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் மனதில் இருந்த நீண்ட நாள் சங்கடம் விலகும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரித்து வருமானம் அதிகரிக்கும்.

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US