தமிழ்நாட்டின் கீழ் பழனி எங்கு உள்ளது தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டம் திருமலைகேணியில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இத்தலம் கரந்தமலை தொடரில் மலை உச்சியிலுள்ள வனப்பகுதியில் வற்றாத நீர்ச் சுனை கொண்டுள்ளதால் திருமலை கேணி என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவிலின் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.
இக்கோவில் மேலே ஒரு முருகன், கீழே ஒரு முருகன் என இரண்டு அடுக்கு கொண்ட முருகன் கோவிலாக உள்ளது.
இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1981ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
மேலே உள்ள முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தமானது கீழே உள்ள முருகன் சிலைக்கும் போய்சேரும் விதமாக இக்கோவிலின் மூலஸ்தானம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் என்றும் வற்றாத வள்ளி தீர்த்த கிணறு மற்றும் தெய்வானை தீர்த்தம் உள்ளது.
மேலும், இக்கோவிலில் மௌனகுரு சுவாமிகளான சித்தர் ஒருவர் இங்கு ஜீவசமாதி நிலை அடைந்துள்ளார். அவருக்கென்ன தனி சன்னிதானமும் அமைக்கப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது.
பழனியில் முருகனைப் படிகள் ஏறி வந்த தரிசிப்பது போல் இத்திருமலைகேணி கோவிலில் படிகள் இறங்கி வந்து தரிசிப்பதால் இக்கோவிலைக் கீழ் பழனி என்று அழைக்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |