நிலை வாசலில் நாய் தலை வைத்துப் படுக்கிறதா? இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்
காலம் காலமாக வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் வழக்கம் வைத்திருக்கின்றோம். அவ்வற்றில் அனைவரும் மிகவும் ஆசையாக வளர்க்கும் பிராணிகள் என்றால் அதில் நாய்கள் முதல் இடம் பிடிக்கிறது.
அப்படியாக, நாய்கள் வீடுகளில் வளர்ப்பதால் ஜோதிட ரீதியாக நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது என்கிறார்கள். அதாவது, வீடுகளில் ஏதேனும் தோஷம் இருந்தால் நாம் நாய்கள் வளர்க்கும் பொழுதும் அந்த தோஷம் நிவர்த்தி ஆகிறது.
மேலும், சில வீடுகளில் பெண்களால் சாபம் ஏற்பட்டு பரம்பரை பரம்பரையாக அவர்கள் துன்பப்படும் நிலை உண்டாகி இருக்கும். அவர்கள் வீடுகளில் பெண் நாய் வளர்த்து பராமரிப்பதால் அவர்களுக்கு உண்டான பெண் தோஷம் விலகி மகிழ்ச்கி உண்டாகிறது.
அதோடு, சிலருக்கு நீண்ட வருடமாக குழந்தைக்காக காத்திருந்தும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டு கொண்டு இருக்கும். அவர்களும் வீடுகளில் பெண் நாய்கள் வளர்த்து வரும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கிறது.
மேலும், நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் நாய்கள் காலபைரவரின் அம்சமாக பார்க்கப்படுகிறது. காலபைரவர் தான் ஒருவர் வாழ்க்கையில் சந்திக்கும் அவமானம், வழக்கு, நம்முடைய ஆயுள் என்று எல்லாவற்றிக்கும் காரணமாக இருக்கிறார்.
அப்படியாக, நாம் வீடுகளில் நாய்கள் வளர்க்கும் பொழுது கட்டாயம் அவற்றிக்கு நல்ல சக்திகளும், தீய சக்திகளும் கண்களுக்கு தெரியும். மேலும், திடீர் என்று நாய்கள் வீட்டின் நிலை வாசலில் தலை வைத்து படுத்து இருந்தால் நம் வீடுகளில் ஏதேனும் பிரச்சனைகள் வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள்.
இவ்வாறு வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பதால் நம் வீட்டில் என்ன என்ன மாற்றங்கள் நடக்கிறது? பொருளாதார ரீதியாக என்ன முன்னேற்றம் கிடைக்கிறது என்று பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஜெயந்தி ரவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |