அனுமன் ஜெயந்தி அன்று தானம் செய்யவேண்டிய 5 பொருட்கள்
மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமபிரானின் மிக பெரிய பக்தனும், ஸ்ரீ ராமருக்கு மிகவும் பிடித்தமான அனுமன் அவர் மிகவும் சக்தி மிக்க தெய்வம் ஆவார். அனுமனை வழிபாடு செய்தால் நம்மை சூழ்ந்து உள்ள எதிர்மறை ஆற்றல் அடியோடு விலகி விடும்என்பது ஐதீகம்.
அப்படியாக, ஒவ்வொரு வருடமும் அனுமனுக்கு உரிய அனுமன் ஜெயந்தி மிக சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த வருடம் அனுமன் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 12 சனிக்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது.
அன்றைய தினம் நாம் அனுமனை நினைத்து வேண்டுதல் வைக்க அது நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் அன்றைய தினம் இன்னும் கூடுதல் பலன் பெற, நாம் 5 பொருட்கள் தானம் செய்வதால் அனுமனின் முழு அருளை பெறலாம் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
1. அனுமன் ஜெயந்தி அன்று மஞ்சள் தானம் செய்வது நமக்கு சிறந்த பலன் கொடுக்கும் என்கிறார்கள். அதாவது மஞ்சள் தானம் செய்வதால் நம்முடைய நிதி நிலை மேம்படும் என்கிறார்கள்.
2அன்றைய தினம் கஷ்டப்படும் அன்பர்களுக்கு உணவு தானியங்களை தானம் வழங்குவது, நமக்கு குடும்பத்தில் உண்டான சிக்கலை விலக்க செய்கிறது. மேலும், உணவு தானியங்களை நாம் தானம் செய்வது நமக்கு மஹாலக்ஷ்மி தேவி அருளையும் பெற்று கொடுக்கும்.
3. அனுமன் ஜெயந்தி அன்று லட்டு தானம் செய்யலாம் என்கிறார்கள். அவ்வாறு தானம் செய்யும் பொழுது நாம் செய்யும் தொழிலும் வேலையும் சிறப்பாக அமையும்.
4.அனுமன் என்றால் நமக்கு நினைவு வருவது செந்தூரமும் ஒன்று. அன்றைய நாள் செந்தூரம் தானம் செய்வதும் நமக்கு அனுமனின் முழு அருளை பெற்று கொடுக்கும்.
5.அனுமனுக்கு மிக பிடித்தமான உணவுகளில் ஒன்று வறுத்த கொண்டக்கடலையும் வெல்லமும் ஆகும். ஆக, அன்றைய தினம் கடலை மற்றும் வெல்லம் தானம் செய்வது அனுமனை மகிழ்விக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |