கண் திருஷ்டி விலக இந்த ஒரு எளிய பரிகாரம் போதும்- செய்து பாருங்கள்
கண் திருஷ்டி என்பது மிகவும் கொடிய மற்றும் மோசமான ஒன்றாகும். அதாவது ஒரு மனிதனுக்கு நோய் தாக்குதலை தாண்டிலும் இந்த கண் திருஷ்டி ஆனது மிகப் பெரிய அளவில் அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு எதிர்மறையான தாக்கத்தை உண்டு செய்கிறது.
அந்த வகையில் மனிதர்களாகிய நமக்கு சிறு வேலை செய்தாலும் சமயங்களில் உடலில் சோர்வு உண்டாகுவதை நாம் காணமுடியும். அதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒன்று நம்முடைய உடல் பலவீனம் மற்றொன்று கண்திருஷ்டி.
அதாவது இந்த கண் திருஷ்டி ஒருவருக்கு அதிகமாக இருக்கும் பொழுது அவர்களால் எந்த ஒரு வேலையையும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு நிலையில்லாமல் இருக்கும். அடிக்கடி உடலில் சோர்வை அவர்களால் உணர முடியும்.
இவ்வாறு கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வீடுகளில் செய்ய வேண்டிய ஒரு சக்தி வாய்ந்த மற்றும் எளிய பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

நம்முடைய உடலில் 7 சக்கரங்கள் இருக்கிறது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கிக் கொண்டிருந்தால் உடல் நிலையில் பாதிப்பு எதுவும் இல்லாமல் நாம் அருமையாக நம் வாழ்க்கையை வாழ்ந்து விடலாம்.
இந்த சக்கரங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அவை நம் உடலில் நிறைய தாக்கங்களை உண்டு செய்து விடும். உதாரணமாக மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டு விட்டால் அந்த மரமே பட்டுப்போகிவிடும்.
அதேபோல் ஒரு மனிதனுக்கு கண் திருஷ்டி பாதிப்பு வந்து விட்டால் அவனுடைய ஏழு சக்கரங்களும் சரியாக இயங்காமல் பலவீனமான நிலைக்கு சென்று விடும் என்று சொல்கிறார்கள். இதற்கு ஒரு எளிய பரிகாரம் என்னவென்றால் "கடல் நீர்".
ஆன்மீக ரீதியாக கடல் நீரில் நீராடுவது என்பது மிகவும் புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் நாம் கடல் நீரில் நீராடும் பொழுது நம்முடைய ஏழு சக்கரங்களும் பலம் பெற்று இயங்குகிறது. அதாவது எப்படி தண்ணீர் வானத்திற்கு சென்று மழையாக திரும்பி நம்மிடமே வருகிறதோ, அதை போல் கடல் தண்ணீரில் நாம் குளிக்கும் பொழுது நம்முடைய உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் பலப்படுக்கிறது.
அதேபோல் ஒரு வீடுகளில் ஏதேனும் எதிர்மறை ஆற்றல்கள் நிறைய சூழ்ந்து இருந்தால் அந்த வீடுகளில் என்னதான் முயற்சி செய்தாலும் அவை அவ்வளவு எளிதாக வெளியே செல்வதில்லை. இதற்கு மிக எளிமையான பரிகாரமாக கடல் நீரை எடுத்துக்கொண்டு நம்முடைய வீடுகளில் சுத்தமாக துடைத்து விட்டால் நம் வீட்டில் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட தோஷமும் எதிர்மறை ஆற்றலும் விலகிவிடும் என்கிறார்கள்.
இவ்வாறு செய்ய முடியாதவர்கள் குளிக்கும் பொழுது தண்ணீரில் கல் உப்பை போட்டு குளித்தாலும் நம்முடைய ஏழு சக்கரங்களும் சரியாக இயங்கும் என்கிறார்கள். ஸ்ரீராம பிரான் "பார்த்திப லிங்கத்தை" அவரே உருவாக்கி அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார்.
ஆக கடல் நீர் அவ்வளவு விசேஷமானதாக இருக்கிறது. ஒரு சிறிய எளிய பரிகாரங்களை நாம் வீடுகளில் செய்து பார்க்கும் பொழுது கட்டாயமாக நல்ல மாற்றங்களை நாம் உணரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |