2026 சனி திரயோதசி: வாழ்க்கையில் அதிரடி திருப்பங்கள் பெறப்போகும் ராசிகள்
2026 சனி திரயோதசி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையையும் திருப்பத்தையும் கொடுக்க இருக்கிறார். அதாவது இவர்களுக்கு எதிர்ப்பாராத விதமாக திடீர் திருப்புமுனையாக வேலை மற்றும் தொழிலில் அமையப்போகிறது. அந்த வகையில் எந்த ராசியினர் சனி திரயோதசியில் மிக பெரிய அளவில் மாற்றம் பெற போகிறார்கள் என்று பார்ப்போம்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு சனி திரயோதசி யோகம் இவர்களுக்கு வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை தேடி கொடுக்க போகிறது. அலுவலகத்தில் இருந்து வந்த வேலை அழுத்தங்கள் குறையும். ஆரோக்கிய ரீதியாக நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். புதிய தொழில் தொடங்குவதை பற்றி ஆலோசனை உண்டாகும்.
மீனம்:
மீன ராசியினருக்கு சனி திரயோதசி யோகம் தொழில் ரீதியாக புதிய நட்புகளை பெற்றுக் கொடுக்கப் போகிறது. உங்களுடைய வேலைக்கான அங்கீகாரத்தை பெறப்போகிறீர்கள். சமுதாய பணிகளில் நீங்கள் ஈடுபடுவீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். இந்த காலகட்டங்களில் வண்டி வாகனத்தை மாற்றக்கூடிய யோகம் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இந்த யோகமானது இவர்களுக்கு கடன் தொல்லையில் இருந்து விடுபட போகிறார்கள். நீண்ட நாட்களாக வாழ்க்கையில் இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் முடிவிற்கு வரும். நினைத்த பொருட்களை வாங்கி மகிழக் கூடிய யோகம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையி டம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |