ஒருவரின் விதி எப்படி எழுதப்படுகிறது? அதன் உண்மையும் ரகசியமும்
இந்த பிரபஞ்சம் நிறைய ஆச்சரியங்களை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. இந்த உலகில் செய்யக்கூடிய எல்லா செயல்களும் இந்த பிரபஞ்சத்தினால் கவனிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
ஆதலால் நாம் செய்யும் செயலுக்கான பலன்களில் இருந்து இங்கு யாரும் தப்ப முடியாது. அப்படியாக இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்ற விதி ஆனது எவ்வாறு செயல்படுகிறது? விதியின் உண்மையும் ரகசியமும் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

1.செத்தும் சீரழிவு:
ஒரு நாள் கடற்கரையில் ஒரு மண்டையோடு கண்டறியப்படுகிறது. பிறகு மன்னனுடைய உத்தரவின் படி அந்த மண்டையோடு அந்தப்புரத்திற்கு எடுத்து வரப்பட்டது. அந்த சமயத்தில் அரண்மனையில் இருந்த மந்திரி விளையாட்டாக சொன்ன ஒரு பொய் அங்கிருந்த பட்டுத்தரசியின் கோபத்தை தூண்டியது.
கோபத்தின் விளைவாக உரலில் போட்டு உலக்கையால் அந்த மண்டையோட்டை தூள்தூளாக இடித்து விடுகிறார். பட்டத்தரசி இடித்துக்கொண்டு இருந்த அந்த மண்டையோட்டின் நெற்றியில் எழுதி இருந்தது "செத்தும் சீரழிவு" என்று. ஆக ஒருவருடைய கர்மவினையானது மிக மோசமாக இருந்துவிட்டால் அவன் இறந்த பின்பும் அவனுக்கு நிம்மதி கிடைக்காது.

2. செத்தும் சீரோடு பொலிவு:
ஒருமுறை ராஜா காட்டு வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கு மற்றொரு மண்டையோடு கண்டறியப்படுகிறது. மன்னன் அதன் மீது கொண்டுள்ள மரியாதையினால் அதை தனது பல்லாக்கில் ஏற்றி வைத்துவிட்டு அவர் நடந்து அரண்மனைக்கு சென்று விட்டார்.
ஆக மன்னனின் பல்லாக்கில் செல்லும் பாக்கியம் அந்த மண்டையோட்டிற்கு இறந்த பிறகும் கிடைத்திருக்கிறது. அந்த மண்டையோட்டின் நெற்றியில் எழுதி இருந்தது "செத்தும் சீரோடு பொலிவு என்று.
ஆதலால், இந்த பிரபஞ்சம் நமக்கு அடிக்கடி உணர்த்திக் கொண்டிருக்கின்ற ஒரு நிகழ்வு, வாழும்போது நாம் செய்கின்ற நற்செயல்கள் தான் நம் இறந்த பிறகு நமக்கான மரியாதையாக வந்து சேர்கின்றது.
நீங்கள் வாழும் பொழுது தர்மத்தோடும் நல்ல சிந்தனையோடும் நல்ல செயல்கள் செய்தும் வாழ்ந்து விட்டால் இறந்த பிறகு உங்களுக்கு எப்பேர்ப்பட்ட துன்பம் என்றாலும் உங்களை காத்து நிற்பதற்கு மொத்த பிரபஞ்சமும் ஒன்று இணைந்து வந்து நிற்கும். அதை விட முக்கியமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நன்மை தீமை எதுவாயினும் இறந்தாலும் உங்களை வந்து அடையும் என்பதை நமக்கு தீர்க்கமாக உணர்த்துகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |