மறந்தும் வீட்டில் இந்த பொருட்களை இந்த திசையில் வைக்காதீர்கள்
வாஸ்து என்பது வீட்டில் மிக முக்கியமான அம்சம் ஆகும்.ஒருவர் வீட்டில் வாஸ்து சரியான முறையில் அமைந்தால் மட்டுமே வீட்டில் சந்தோசம் நிலவும்.திடீர் என்று வீட்டில் நிதி நெருக்கடிகள் மற்றும் மகிழ்ச்சியின்மை ஏற்பட்டால் வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடு ஏற்பட்டு இருக்கலாம்.
இவ்வாறான திடீர் சூழல் வீட்டில் உண்டாகும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம். வாஸ்து சாஸ்திர படி வீட்டில் சில பொருட்களை வீட்டில் தெற்கு திசையில் வைக்க கூடாது.அப்படியாக வீட்டில் காலணிகள் வைப்பதற்கு என்று தனி இடம் இருக்க வேண்டும்.
ஏன் என்றால் காலனி அணிந்து கொண்டு நாம் பல இடங்களுக்கு சென்று வருகின்றோம்.அதில் தெரியாமலும் கெட்ட சக்திகள் ஒட்டி கொள்ள வாய்ப்பு உள்ளது.அதே காலனியை வீட்டிற்குள் நாம் அணிந்து நடந்து செல்ல அவை வீட்டின் மகிழ்ச்சியின்மை பாதிக்கும்.
ஆதலால் வீட்டிற்குள் காலனி அணியவேண்டும் என்றால் அதற்கென்று தனியாக ஒரு காலனி வைத்து கொள்வது நல்லது.மேலும் காலணிகளை தெற்கு திசையில் செருப்பு, காலணிகளை வைக்க கூடாது. இது வீட்டில் நிலையற்ற நிதித்தன்மைக்கு வழிவகுக்கிறது.
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இந்த பழக்கம் வீட்டின் நல்வாழ்வை எதிர்மறையாக மாற்றுகிறது. இந்து சமயத்தில் துளசி மஹாலக்ஷ்மி அம்சமாக பார்க்க படுகிறது.அப்படியாக மறந்தும் நாம் துளசியை வீட்டின் தெற்கு திசையில் வைக்க கூடாது.
இவ்வாறு வைக்கும் பொழுது வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகி குடும்பத்தில் உடல் நல குறைபாடுகள் ஏற்படலாம்.ஆதலால் துளசி செடியை வீட்டின் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைத்து வழிபட வேண்டும். நம்முடைய வீட்டின் பூஜை அறையில் மிக முக்கியமான பொருளாக விளக்கு உள்ளது.
நம்முடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் கொடுக்க கூடியது இந்த தீபம் தான்.அப்படியாக ஒரு போதும் இந்த விளக்கை தெற்கு திசையில் வைக்கக்கூடாது.அவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் எதிர்மறை ஆற்றல் மட்டும் நிதி நெருக்கடிகள் உண்டாகும்.
மேலும் வீட்டின் தெற்கு திசையில் பூஜை அறை அமைக்கக் கூடாது.படுக்கையறையில் தூங்கும் போது பாதங்கள் தெற்கு நோக்கி இருக்கக்கூடாது. இதனால் திருமண வாழ்வில் குழப்பங்கள் ஏற்படும். தெற்கு திசையில் சமைப்பதும் நல்லதல்ல. இவை அனைத்தும் வீட்டில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |