ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளவர்கள் எளிதில் ஏமாந்து விடுவார்களாம்
நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் எல்லோரையும் வெகுளித்தனமாக நம்புவார்கள். எல்லோரும் உண்மையானவர்கள் என்றே எண்ணுவார்கள். அவர்களுக்கு அவ்வளவு எளிதாக யார் நல்லவர் தீயவர் என்று பிரித்து பார்க்க தெரியாது.
அதேபோல், இந்த நபர்களிடம் அன்பாக ஒரு சில வார்த்தைகள் பேசினால் அவர்கள் தான் உலகம் என்பது போலும் அவர்கள் நினைத்து விடுவார்கள். இதற்கெல்லாம் அவர்களுடைய ஜாதகம் அமைப்பும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

அந்த வகையில், எந்த ஜாதக அமைப்பு உள்ளவர்கள் எளிதில் ஒருவரை பார்த்து ஏமாந்து விடுவார்கள் என்பதை பற்றி பார்ப்போம். ஒருவர் மீன ராசியாக இருந்தாலும் சரி மீன லக்னமாக இருந்தாலும் சரி இவர்கள் மிகவும் இயல்பான குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
மேலும், இவர்கள் மனம் குழந்தை போன்று இருக்கின்றது. முதலில் எல்லோரையும் அவர்களைப்போல் நல்லவர்களாக தான் அவர்கள் பார்க்கிறார்கள்.

ஆதலால், யாராவது ஒருவர் நல்ல விஷயங்களை சொல்வது போல் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்றால் அதை இவர்களால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. காலம் கடந்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டால் மட்டுமே அந்த நபர்கள் இவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்கிறார்கள்.
ஆக, இவ்வாறான ராசியிலும் லக்கினத்தில் பிறந்தவர்கள் அழகு வார்த்தைகளுக்கும் அன்பு வார்த்தைகளுக்கும் உடனடியாக அடிபணியாமல் சற்று புத்தி கூர்மையை பயன்படுத்தி ஆராய்ந்து பிறகு பழகும் பொழுது பல ஆபத்துகளில் இருந்து இவர்கள் தப்பிக்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |