2026 ஐப்பசி பௌர்ணமி: இன்று வீடுகளில் அன்னாபிஷேகம் செய்வது எப்படி?
2026 ஆம் ஆண்டு ஐப்பசி பௌர்ணமி இந்த ஆண்டு அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த நாள் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக இருக்கிறது. இந்த நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெறும்.
அதனால், இந்த நாட்களில் நாம் அன்னாபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது என்பது நமக்கு மிகப்பெரிய அளவில் புண்ணியமும், பாவங்களும் தோஷங்களும் போக்க கூடியதாக இருக்கிறது.
இருப்பினும் எல்லோராலும் இந்த தினத்தில் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு நடத்தக்கூடிய அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவ்வாறு செல்ல முடியாதவர்கள் கவலை கொள்ளாமல் வீடுகளில் சிவலிங்கம் வைத்திருந்தால் அதற்கு நம்முடைய கைகளால் அன்னாபிஷேகம் செய்து கட்டாயம் வழிபாடு செய்யலாம்.
வீடுகளில் சிவலிங்கம் இல்லாதவர்களும் சிவபெருமான் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

வீட்டில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் சரியான முறை :
உங்கள் வீடுகளில் சிவலிங்கம் வைத்திருந்தால் முதலில் அதற்கு சுத்தமான நீரால் அபிஷேகம் செய்த பிறகு திருநீறு பால், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். அதன் பிறகு சுத்தமான நீரில் லிங்கத்தை சுத்தம் இது செய்து பூஜை அறையில் ஒரு வாழை இலை விரித்து அதற்கு மேல் லிங்கத்தை வைக்க வேண்டும்.
அதனை தொடர்ந்து பச்சரிசியை நன்கு குழைந்த சாதகமாக வடித்து ஆற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆற வைத்த பச்சரிசி சாதத்தை அந்த லிங்கத்தின் மீது கீழிருந்து மேலாக முழுவதுமாக மூடும்படி அபிஷேகம் செய்ய வேண்டும்.
பிறகு சாதத்தால் லிங்கத்தை முழுவதுமாக முடிய பிறகு அதற்கு மேல் காய்கறிகள் பழங்கள், பதார்த்தங்கள் ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைக்கலாம். மேலும், சிவலிங்கத்திற்கு அன்னாஅபிஷேகம் செய்த பிறகு தீபாரதனை காட்ட வேண்டும்.
அதோடு இந்த நாளில் சக்தி வாய்ந்த சிவபுராணம் பாராயணம் செய்வது மிகச் சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.

வழிபாடு செய்து முடித்த பிறகு மூன்று மணி நேரம் கழித்து லிங்கத்தின் மீது சாற்றிய அன்னத்தை எடுத்து குடும்பத்தினருடன் சேர்ந்து பிரசாதமாக பகிர்ந்து உண்ணலாம். அபிஷேகம் செய்ததை வாயில்லா ஜீவன்களுக்கும் கொடுக்கலாம்.
மேலும், லிங்கத்திற்கு சாற்றிய அன்ன பிரசாதத்தைமாதமாக வெறும் சாதமாக சாப்பிடக்கூடாது. அதனுடன் தயிர், சாம்பார், நெய் கலந்து சாப்பிடுவது அவசியம்.
வீடுகளில் லிங்கம் இல்லாமல் சிவலிங்கம் போட்டோ வைத்து வழிபாடு செய்யக்கூடியவர்கள் அபிஷேகம் செய்ய முடியாது என்பதால் வாழை இலை விரித்து நெய்வேத்தியமாக சிவனுக்கு படைத்து வழிபாடு செய்யலாம். பச்சரிசி சாதத்துடன் சிறிதளவு நெய் சேர்த்து நெய் நெய்வேத்தியமாக படைக்கலாம்.
அதோடு, கூட்டு பொரியல், அப்பளம், பழங்கள் பதார்த்தங்கள் சேர்த்து படைக்கலாம். இந்த நாளில் "ஓம் நமசிவாய" என்ற மந்திரம் பாராயணம் செய்வது, சிவபுராணம், கோளாறு பதிகம் பாராயணம் செய்வது என்பது கர்ம வினைகளையும் போக்கி சிவபெருமானுடைய அருளை பெற்றுக்கொடுக்கும்.
இந்த நாளில் அன்னதானம் செய்வது, வெள்ளை ஆடைகளை தானமாக வழங்குவது ஆகியவை புண்ணியம் பெற்று கொடுக்கும். இதனால் சந்திர தோஷம் ஆகியவை விலகுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |