சனி வக்ர பார்வையில் இருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும்?
சனி பெயர்ச்சி என்றாலே பலருக்கும் பல விதமான பயம் உண்டாகும். காரணம், சனி மிக பெரிய கலக்கத்தை கொடுத்து விடுவார். ஒருவர் ஜாதக ரீதியாக ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, தனி நபர் ஜாதகத்தில் சனி திசை போன்ற காலங்கள் கடுமையான சோதனைகளை உண்டாக்கும்.
அதாவது, உலக இயக்கமே நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம வினைகளை அனுபவிப்பதுதான். அந்த செயலை சனி பகவான் மிக சரியாக செய்து விடுவார். அப்படியாக, சனி பகவான் ஒவ்வொரு 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவது வழக்கம்.
இந்த ஆண்டு மார்ச் 29 அன்று நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியில், அவர் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு செல்கிறார். இதையடுத்து ஜூன் 3, 2027 வரை அங்கேயே தங்கி இருப்பார், பின்னர் மேஷத்திற்கு மாறுவார்.
இந்த சனி பகவானின் மீன ராசி பயணம் எல்லா ராசிகளுக்கும் ஒருவித தாக்கத்தை கொடுக்க உள்ளார். சிலர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கலாம். சில ராசிகள் துன்பத்தை சந்திக்கலாம். ஆதலால் சனியின் வக்ர பார்வையில் சிக்குபவர்கள் அவரின் தாக்கம் குறைய செய்யவேண்டிய பரிகாரம் பற்றி பார்ப்போம்.
1. சனியின் தாக்கம் குறைய நாம் சனி பகவானை பற்றி கொள்வதை தவிர வேறு வழி இல்லை. அதோடு சனி காலங்களில் மனம் சங்கடமான சூழ்நிலையில் காணப்படும். அந்த வேளையில் சனி பகவானின் இந்த "ஓம் ஷாம் சனிச்சாராய நமஹ"மந்திரத்தை அடிக்கடி சொல்லி வர, மனதில் பயம் விலகி நேர்மறை ஆற்றல் உண்டாகும்.
2. சனி பகவானின் தீமை குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவான் படத்திற்கு முன் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறந்த பலன் கொடுக்கும்.
3. சனி பகவான் மந்திரத்துடன் "சனி காயத்ரி மந்திரம்" அல்லது "சனி மகாமந்திரம்" சொல்வதும் நமக்கு வரும் பாதிப்புகளை குறைக்கிறது.
4. சனி பகவானுக்கு எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்து, தானம் வழங்குவது மிகவும் பிடித்தமான விஷயம். ஆக, கருப்பு எள், கருப்பு ஆடைகள், கடுகு எண்ணெய், இரும்பு பாத்திரங்கள் அல்லது உளுந்து போன்ற பொருட்களை தானம் செய்ய சனியின் தீவிரம் குறையும்.
5. சனி பகவானுக்கு கருப்பு நிறம் மிகவும் பிடித்தமானது. அதனால் சனிக்கிழமையில் கருப்பு நிற ஆடை அணிந்து கருப்பு ரத்தின நகைகள் அணிவது வரும் துன்பத்தை எதிர்த்து போராட உதவியாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |