கேது கிரகம் யாருக்கு வெற்றி வாழ்க்கையை கொடுக்கும்?
ஜோதிடத்தில் 9 கிரகங்கள் இருக்கிறது. அதில் கேது என்றால் அனைவரும் அது தீயது என்று சொல்கிறார்கள். அப்படியாக, கேது ஒரு ஜாதகத்திற்கு என்ன செய்யும்? நன்மை விளைவிக்குமா? தீங்கு விளைவிக்குமா? என்று பார்ப்போம்.
ஜோதிடத்தில் கேது எண் 7யை குறிக்கும். அப்படியாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் கேதுவின் அம்சமே ஆவார். கேதுவின் காரகத்துவங்களில் என்று எடுத்து கொண்டு கொண்டால், நம் வாழ்க்கைக்கு தேவை இல்லாததை விலக்கி வைப்பதே கேதுவின் செயல் ஆகும்.
அதாவது, நம் ஜாதகத்திற்கு ஒரு விஷயம் தேவை படாது என்று இருக்கும் விஷயத்தை முற்றிலுமாக துண்டிக்க செய்யும். அதோடு யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று உணர்ந்து தெளிய செய்யும் கிரகமும் கேது தான்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உலகில் பிறந்த அனைத்து உயிரும் அவர்களின் கர்மவினைகளை கழித்து கடமை ஆற்றவே பிறந்திருக்கின்றோம் என்று வாழ வேண்டும் என்கிறார்.
அதாவது, ஏதன் மீதும் அதீத அன்பும் பற்றும் இல்லாமல் வாழ்தலே இறைவனை அடைய செய்யும் ஒரே வழி என்றும் அதுவே இறைவனின் அனுகிரகத்தை நமக்கு பெற்றுத்தரும் என்பதை பாரதப் போரில் கீதையின் வாயிலாக உணர்த்தியவர்.
ஆக, கேது உணர்த்தும் மூல தத்துவமே முழுமையான பற்றின்மை தான். அதனால் தான் மூலம் நட்சத்திரம் கால புருஷனின் "*பாக்கிய ஸ்தானத்தில்" (தனுசு ராசியில்) அமர்ந்துள்ளது. எதிலும் பற்றில்லாமல் வாழ, பகவானின் அருள் பாக்கியம் நமக்கு வந்து சேரும்.
அதாவது, அர்ஜுனனுக்கு கிருஷ்ணரின் அருளாதரவு கிடைத்தது போல.ஆம், அர்ஜூனனின் வில் தான் இந்த பாக்கிய பாவகமான தனுசு ராசியின் ஒரு சின்னம் ஆகும். இந்த தனுசு ராசி மாதங்களில் மார்கழியை குறிப்பதாகும்.
மாதங்களில் தன்னை மார்கழி என்று "கிருஷ்ணர்" குறிப்பிட்டுள்ளார். கேதுவின் ஞானம் ஒருவருக்கு ஆத்ம திருப்தி வழங்கக்கூடியது. எல்லாந் நன்மைக்கே என்றும், அவன் நடத்தும் நாடகத்திற்கு எல்லாம் ஒரு காரணம் இருக்கும் என்று நடப்பதை அப்படியே ஏற்று கொள்ளும் பக்குவத்தை வழங்க கூடியது இந்த கேது.
ஆக, உண்மையில் கேது அளிக்கும் சுகமே முழுமையானது. இதை தனது வாய்மொழியால் உணர்த்தியவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே.
மேலும், மனித வாழ்வில் ஒருவருக்கு சுகம் என்பது உணரப்பட வேண்டியது மட்டும் தானே தவிர, அடைந்து அனுபவிக்க வேண்டியது அல்ல. சிந்தித்து செயல்படுங்கள். ஆக, கேதுவின் பாதையில் கிருஷ்ணனின் கீதை ஒலிக்கட்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |