9 எண்ணில் ஒளிந்திருக்கும் அதிசயமும் தத்துவமும்
எண்களில் மிகவும் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர். ஏன், புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்.
பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான். ஒன்பது என்னும் எண் இன்னும் பல மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணை வடமொழியில் நவம் என்பர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது. அப்படியாக ஒன்பது எண்ணின் நிறைந்து இருக்கும் அதிசயமும் தத்துவத்தையும் பற்றி பார்ப்போம்.
நவ சக்திகள்
1. வாமை,
2. ஜேஷ்டை,
3. ரவுத்ரி,
4. காளி,
5. கலவிகரணி,
6. பலவிகரணி,
7. பலப்பிரமதனி,
8. சர்வபூததமனி,
9. மனோன்மணி.
நவ தீர்த்தங்கள்
1. கங்கை,
2. யமுனை,
3. சரஸ்வதி,
4. கோதாவரி,
5. சரயு,
6. நர்மதை,
7. காவிரி,
8. பாலாறு,
9. குமரி.
நவ வீரர்கள்
1. வீரவாகுதேவர்,
2. வீரகேசரி,
3. வீரமகேந்திரன்,
4. வீரமகேசன்,
5. வீரபுரந்திரன்,
6. வீரராக்ஷசன்,
7. வீரமார்த்தாண்டன்,
8. வீரராந்தகன்,
9. வீரதீரன்.
நவ அபிஷேகங்கள்
1. மஞ்சள்,
2. பஞ்சாமிர்தம்,
3. பால்,
4. நெய்,
5. தேன்,
6. தயிர்,
7. சர்க்கரை,
8. சந்தனம்,
9. விபூதி.
நவ ரசம்
1. இன்பம்,
2. நகை,
3. கருணை,
4. கோபம்,
5. வீரம்,
6. பயம்,
7. அருவருப்பு,
8. அற்புதம்,
9. சாந்தம்.
நவக்கிரகங்கள்
1. சூரியன்,
2. சந்திரன்,
3. செவ்வாய்,
4. புதன்,
5. குரு,
6. சுக்கிரன்,
7. சனி,
8. ராகு,
9. கேது.
நவரத்தினங்கள்
1. கோமேதகம்,
2. நீலம்,
3. வைரம்,
4. பவளம்,
5. புஸ்பராகம்,
6. மரகதம்,
7. மாணிக்கம்,
8. முத்து,
9. வைடூரியம்.
நவ திரவியங்கள்
1. பிருதிவி,
2. அப்பு,
3. தேயு,
4. வாயு,
5. ஆகாயம்,
6. காலம்,
7. திக்கு,
8. ஆன்மா,
9. மனம்.
நவ தானியங்கள்
1. நெல்,
2. கோதுமை,
3. பாசிப்பயறு,
4. துவரை,
5. மொச்சை,
6. எள்,
7. கொள்ளு,
8. உளுந்து,
9. வேர்க்கடலை.
சிவ விரதங்கள் ஒன்பது
1. சோமவார விரதம்,
2. திருவாதிரை விரதம்,
3. உமாகேச்வர விரதம்,
4. சிவராத்ரி விரதம்,
5. பிரதோஷ விரதம்,
6. கேதார விரதம்,
7. ரிஷப விரதம்,
8. கல்யாணசுந்தர விரதம்,
9. சூல விரதம்.
நவக்கிரக தலங்கள்
1. சூரியனார் கோவில்,
2. திங்களூர்,
3. வைத்தீஸ்வரன் கோவில்,
4. திருவெண்காடு,
5. ஆலங்குடி,
6. கஞ்சனூர்,
7. திருநள்ளாறு,
8. திருநாகேஸ்வரம்,
9.கீழ்ப்பெரும்பள்ளம்.
ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம் மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம் ஆகும். மனிதனாகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |