உருவான திரிக்கிரகி யோகம்- எதிர்பாரா பொருளாராதர அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்கள் அவர்களுடைய இடத்தை மாற்றி கொண்டே இருப்பார்கள். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் ஒரு விதமான தாக்கத்தை கொடுக்கும். அப்படியாக, சில கிரகங்கள் ஒரே ராசியில் சேர வாய்ப்புகள் இருக்கிறது.
இதனால் பல யோகங்கள் உருவாகும். இந்த சேர்க்கை பல ராஜயோகத்தை உருவாக்கும். அந்த வகையில் மீன ராசியில் சுக்கிரன் ராகு மற்றும் சனி இவை அனைத்தும் ஒன்றாக சேரும் பொழுது, திரிக்கிரகி யோகம் உண்டாகும். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள். அவை என்ன ராசி என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு திரிக்கிரகி யோகம் வியாபாரத்தில் மிக பெரிய மாற்றத்தை கொடுக்கும். திடீர் பணவரவு உண்டாகும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். சமுதாயத்தில் உங்களுக்கு அதிக அளவில் மரியாதை கொடுக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்கு திரிக்கிரகி யோகம் அற்புதமான பலனை கொடுக்கும். வாழ்க்கையில் பல்வேறு அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். வாங்கிய கடன்களை அடைப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு திரிக்கிரகி யோகம் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும். வேலையில் நல்ல வெற்றிகள் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். திடீர் இடம் தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும். தாய் தந்தைகள் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |