வீட்டில் சிலந்தி வலை இருக்கிறதா? இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்
நம்முடைய வீடுகளை நாம் மிகவும் சுத்தமாக வைப்பது நம்முடைய உடலுக்கும் மனதிற்கும் நிம்மதியை கொடுக்கும். மேலும், எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் சில நேரங்களில், சில இடங்களில் சிலந்தி வலை பின்னியிருப்பதை நாம் பார்க்க முடியும்.
அப்படியாக, ஜோதிட சாஸ்திரத்தில் வீடுகளில் சிலந்தி வலை இருப்பது அவ்வளவு விசேஷமாக பார்க்கப்படுவதில்லை.
அவை எதிர்மறை ஆற்றலை உணர்த்துவதாக சொல்லப்படுகிறது. அப்படியாக, வீடுகளை எவ்வளவு சுத்தம் செய்தாலும் சிலந்தி வலையை அகற்ற முடியவில்லை என்றால் என்ன செய்யவேண்டும்? சிலந்திகள் வீட்டிற்குள் இருப்பதால் வேறு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம்.
சிலந்திகள் எப்பொழுதும் ஜோதிட சாஸ்திரத்தில் நல்ல விஷயமாக கருதுவதில்லை. சிலந்தி வலைகள் வீடுகளில் இருப்பதால் வீட்டில் எதிர்மறை சக்திகள் இருப்பதின் அறிகுறியாகும். மேலும், சிலந்தி வலைகள் வீடுகளில் இருந்தால், அவை நமக்கு பொருளாதார ரீதியாக சில கஷ்டங்களை உண்டு செய்யும் என்றும் சொல்லப்படுகிறது.
நம்முடைய வீடுகளில் தேவை இல்லாத பிரச்சனைகள் மற்றும் மன நிம்மதியை இழக்க நேரிடலாம் என்றும் சொல்லப்படுகிறது. சில வீடுகளில் பூஜை அறையில் சிலந்தி வலை பின்னியிருக்கும். அவ்வாறு இருந்தால் அவை நம் குடும்பத்தில் தவிர்க்க முடியாத கஷ்டங்களை கொடுத்துவிடும்.
அதுவே சமையலறையில் சிலந்தி வலை பின்னப்பட்டிருந்தால் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். எனவே இவ்வாறான இடங்களில் சிலந்தி வலை பின்னியிருப்பதை பார்த்தால் உடனே சுத்தம் செய்து அகற்றி விடுவது நன்மை தரும்.
சில வீடுகளில் எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் மீண்டும் மீண்டும் சிலந்தி வலை பின்னிக்கொண்டே இருக்கும். அவ்வாறு வரும் பொழுது, சில துளிகள் புதினா எண்ணெயை நீரில் கலந்து, ஜன்னல்கள், கதவுகள், மற்றும் சிலந்தி வலை பின்னும் இடங்களில் தெளித்துவிடலாம்.
பொதுவாக சிலந்திகளுக்கு புதினாவின் வாடை பிடிக்காது. அதேபோல், ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களின் தோல்களை கொண்டு, ஜன்னல், கதவு இடுக்குகள் தேய்க்கலாம்.
இது எதுவும் செய்யமுடியவில்லை என்றால் வெறும் தண்ணீரில் கரைத்த கற்பூரத்தை துணியில் நனைத்து, சிலந்தி வலைகள் பின்னும் இடங்களில் தடவி விடலாம்.
அதேபோல சிலந்தியை விரட்ட கிராம்பு, புதினா, வெங்காயம் தோலையும் பயன்படுத்தலாம். ஆக, வீடுகளில் சிலந்தி வலை பார்த்தால் முடிந்த அளவு உடனே அகற்றி சுத்தம் செய்வது நம்முடைய வீடுகளை எதிர்மறை சக்திகள் நெருங்காமல் பாதுகாக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |