கருட புராணம்: ஒருவரை மரணம் நெருங்குவதற்கான 5 அறிகுறிகள் என்ன?
கருடபுராணத்தில் ஒருவரது மரணம் மற்றும் மரணத்திற்கு பிறகான வாழ்க்கை மறுபிறவி போன்ற விஷயங்களை பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படியாக, அதில் ஒரு மனிதனை மரணம் நெருங்குகிறது என்பதற்கான சில அறிகுறிகள் சொல்லப்பட்டு இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
உலகில் தவிர்க்கமுடியாத விஷயங்களில் ஒன்றாகவும், நம் மனதால் ஏற்று கொள்ளமுடியாத ஒன்றாகவும் மரணம் இருக்கிறது. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் கட்டாயம் மரணத்தை தழுவி ஆகவேண்டும்.
ஏன், மனித உருவில் பூமியில் அவதாரம் எடுத்த ராமர், கிருஷ்ணரும் கூட இதற்கு விதி விலக்கல்ல. அப்படியாக, இந்த மரணம் ஒரு மனிதனை எப்பொழுது நெருங்கும் என்று யாருக்கும் தெரியாது. மரணம் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.
நம்முடைய வாழும் காலம் இந்த பூமியில் முடிந்து விட்டது என்றால் மரணம் நம்மை அழைத்து செல்ல வந்துவிடும். அந்த வகையில் கருடபுராணத்தில் மரணத்திற்கு பிறகு ஒருவர் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒருவரின் ஆன்மா எங்கே செல்லும் என்று விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும், ஒருவரை மரணம் நெருங்குகிறது என்பதற்கு சில அறிகுறிகள் இருக்கிறது என்கிறார்கள்.
1. ஒருவருக்கு மரணம் நெருங்குகிறது என்று தெரிந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் நல்லவை கேட்டவை பற்றி ஆராய்ந்து பார்க்க தொடங்கி விடுவார்கள். அதில் நல்லது செய்ததை நினைத்து மகிழ்ச்சியும், கெட்டது செய்ததை நினைத்து அவர்கள் தனக்கு தண்டனை வழங்கப்படுமோ என்று எண்ணி அச்சம் கொள்வதாக சொல்லப்படுகிறது.
2. மரணம் நெருங்கும் முன் அவர்களுக்கு விசித்திரமான நிழல்கள் பின் தொடர்வது போல் கண்களுக்கு தெரியும் என்கிறார்கள். அதோடு அந்த நிழல்கள் அவர்கள் கண்ணுக்கு தெரியவதில்லை, ஆனால் உணர முடியும்.
3. மரணத்தை நெருங்குபவர்களுக்கு விநோதமான விஷயங்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே இறந்தவர்களின் ஆன்மாவும் கண்களுக்கு தெரியும். தன்னை சுற்றி நடக்கும் அமானுஷ்ய விஷயங்களால் எப்போது ஒரு விதமான பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
4. அதே போல் உயிரை பறித்து செல்லும் எமதூதர்கள் அவர்கள் கண்களுக்கு தெரிய தொடங்குவார்கள். யாரோ தன்னை கூட்டி செல்ல வந்திருப்பதாகவும், தனக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் உணருவார்கள்.
5. அவர்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அடிக்கடி அவர்கள் கனவில் வருவதை காணமுடியும். அவ்வாறு வரும் முன்னோர்கள் அவர்களை தன்னோடு வருமாறு அழைப்பது போல் இருக்கும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |