இன்றைய ராசி பலன்(25-05-2025)

Report

மேஷம்:

இன்று நண்பர்களுடன் பொழுது போக்கு நேரத்தை செலவு செய்வீர்கள். சிலர் உங்கள் பேச்சுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று வண்டி வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

வீண் செலவுகளை செய்வதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் நெருக்கடிகள் விலகும். வியாபாரத்தில் உள்ள நஷ்டங்கள் விலகும். பிறரை அனுசரித்து செல்வது உங்களுக்கு நன்மை தரும்.

மிதுனம்:

குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் விலகும். வெளியூர் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கடகம்:

வேலைபளு அதிகரிக்கும். திடீர் வேலையால் வெளியூர் பயணம் ஏற்படும். திட்டமிட்ட வேலை நடக்கும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் உபரி வருமானம் ஏற்படும். முயற்சிகள் வெற்றியாகும்.

சிம்மம்:

செய்யும் காரியங்களில் வெற்றியை சந்திப்பீர்கள். குடும்பத்துடன் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இறைவழிபாடு மனநிம்மதியை கொடுக்கும். பெரியவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

கன்னி:

சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டு. வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம்.

மாலையில் அரசமரத்தடியில் தீபம் ஏற்றுவதால் இத்தனை நன்மைகளா?

மாலையில் அரசமரத்தடியில் தீபம் ஏற்றுவதால் இத்தனை நன்மைகளா?

 

துலாம்:

இன்று பலரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆலோசனையை பெறுவீர்கள். பாதியில் நின்ற வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்:  

உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகுவர். நினைத்ததை நடத்தி முடிப்பீர். நேற்றைய பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும்.

தனுசு:

கடும் முயற்சிகளுக்கு பின் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். ஒரு சிலருக்கு வீடுகளில் விருந்தினர் வருகையால் நன்மை உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனை முடிவிற்கு வரும்.

மகரம்:

முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். நிதானமாக செயல்படுவதும், உடல்நிலையில் கவனம் செலுத்துவதும் அவசியம். வியாபாரம் முன்னேற்றமடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கும்பம்:

குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த வேலைகளை முடிப்பீர். பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த பணம் வரும். உடல், மன நிலையில் உற்சாகம் தோன்றும்.

மீனம்:

உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US