2,4,5,7,8,9 தேதியில் திருமணம் செய்யலாமா? சரியான திருமண தேதி தேர்தெடுப்பது எப்படி?
ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொருவருடைய பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்களுக்கு அதிர்ஷ்ட தேதிகள் உள்ளது. அந்த வகையில், எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த தேதியில் திருமணம் செய்யலாம்? திருமணம் செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
அதாவது ஒரு தம்பதி பிறந்த தேதிக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு சரியான தேதியை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. மேலும், 1,3,6 ஆகிய தேதிகள் திருமணத்திற்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.
மேலும் 7, 16 ,25 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் இவர்கள் இளம் வயதில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பெண்களாக இருந்தால் 25 வயதுக்கு மேலும், ஆண்களாக இருந்தால் 29 வயதிற்கு மேலும் திருமணம் செய்வது அவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள மனக்கசப்புகளை தவிர்க்கும்.
அதேபோல் 5,14, 23 அல்லது 1, 10 ,19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் வெற்றி வாய்ப்புகள் கொடுக்கும்.
மேலும், திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருப்பவர்கள் பெயர் அல்லது வீட்டினுடைய எண் சரியாக இருக்கிறதா என்பதை அவர்கள் சரி பார்ப்பது அவசியமாகும். அதில் சில மாற்றங்களை கொண்டு வரும் பொழுது திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
குழந்தை பிறப்பதில் தாமதத்தையும் மனக்கசப்புகளையும் சந்தித்து வருபவர்கள் எண் கணித முறைப்படி சில மாற்றங்கள் செய்தாலும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். அதோடு எண் கணிதம் பற்றி நமக்கு சில முக்கியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |