ஆன்மீகம்: இந்த உண்மை புரிந்து கொண்டவர் வாழ்வில் இனி துன்பம் இல்லை
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குண நலன்களில் படைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் நல்லதை தேடி நல்லவற்றை தங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மிக குறைவான மனிதர்களிடத்திலே நாம் காண முடிகிறது.
ஆனால், அதிகப்படியான மனிதர்கள் இன்றைய நாள், இன்றைய பொழுது என்னுடையது என்று சில அற்ப ஆசைகளுக்காக சில தவறுகளை செய்யத் துணிகிறார்கள். அந்த தவறுகள் என்பது பொய் சொல்வதில் தொடங்கி பிறருக்கு தீங்கு விளைவிக்கின்ற செயல் என்று எல்லாம் அடக்கத்திற்குரியதாகும்.
அப்படியாக, மனிதர்கள் நாம் என்னதான் நல்வழியில் செல்ல வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்தாலும், புத்தகங்கள் தேடி படித்தாலும், ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்டும் செயல்பட்டாலும் நாம் இன்னும் மேன்மை அடைவதற்கு சில இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது.

அதாவது, இந்த பிரபஞ்சமானது நீங்கள் செல்கின்ற பாதையில் உங்களை சரியாகத்தான் அழைத்து செல்கிறீர்களா? உண்மையாகவே பக்குவம் அடைந்து விட்டீர்களா என்று சில சோதனைகள் நிகழ்த்தும்.
அதையெல்லாம் கடந்து நீங்கள் எதுவாக மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாக மாறும் காலம் வரும் வரை உங்களுக்கு சோதனை என்கின்ற பாடம் இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படியாக, இந்த சோதனை காலம் என்பது பல நேரங்களில் சக மனிதர்களாலே நமக்கு வருகிறது.
அவ்வாறு வருகின்ற பட்சத்தில் மனமானது வருந்தும், இறைவனை வேண்டி துடிக்கும், இன்னும் சில நேரங்களில் செய்வதறியாத வலியால் நம்மை காயப்படுத்தியவருக்கு சாபம் கொடுக்க தூண்டும். உண்மையில், உங்களை நீங்கள் காயப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டுமே இத்தகைய செயல்களில் நீங்கள் ஈடுபடலாம்.
மனிதர்கள் நாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். நவக்கிரகங்களாக போற்றக்கூடிய சூரியன், சந்திரன் ராகு, கேது, சுக்கிரன், செவ்வாய், புதன், குரு என இத்தனை கிரகங்கள் மனிதரை நுணுக்கமாக கவனித்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதை தான் எல்லோருக்கும் ஒரு காலம் வரும் என்று முன்னோர்கள் பேச்சு வழக்கில் சொல்வார்கள்.

அப்படியாக, உங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவர்கள் காலம் இன்று சுகமாக இருக்கலாம். ஆனால் கிரகங்களுடைய சுழற்சி ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டே இருக்கும். அவ்வாறு மாறும்பொழுது அவர்கள் செய்ததற்கான கணக்கை இந்த கிரகமானது கட்டாயம் தீர்த்துவிடும்.
நீங்கள் சாபம் விடுவதாலோ அல்லது உங்களை நீங்கள் நொந்து கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை மாறாக உங்களின் கர்ம வினை கணக்கில் சில பாவங்கள் தான் உயர்ந்து கொண்டு இருக்கும்.
ஆக, உங்களை ஒருவர் காயப்படுத்துகிறார்கள் என்றால் நீங்கள் அமைதியாக கிரகங்கள் எல்லோரையும் மனிதராக மாற்றக்கூடிய ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறது. நீங்களும் உங்களின் தவறை புரிந்து கொள்ளும் ஒரு நாள் கட்டாயம் வரும் என்று கிரகங்களின் பிடியில் விட்டு விடுங்கள். சுமையெல்லாம் விலகி உங்களின் உண்மையான பக்குவ நிலை அந்த புரிதலில் இருந்து தொடங்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |