வாஸ்து: தொழிலில் நஷ்டமா? இந்த 5 பரிகாரம் செய்தால் கோடீஸ்வர யோகம் நிச்சயம்
மனிதனுக்கு தொழில் என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த தொழில் சிறப்பாக அமைந்தால் மட்டுமே நம் இயல்பான வாழ்க்கை சீராக இருக்கும். ஆனால் சமயங்களில் நேரம் சரியில்லாமை காரணமாகவும், அவர்கள் தொழில் வைத்திருக்கக்கூடிய இடத்தின் வாஸ்து அமைப்பு சரியில்லாத நிலையினாலும் நிறைய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க கூடும்.
அப்படியாக, தொழிலில் லாபம் இல்லாத ஒரு நிலை மற்றும்தொடர்ந்து நஷ்டத்தை மட்டும் சந்தித்துக் கொண்டிருக்க கூடிய நபர்கள் அவர்களுடைய தொழிலை உயர்த்துவதற்காக செய்ய வேண்டிய முக்கிய வாஸ்து பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

1. தொழில் இடங்களில் நீங்கள் தவறாமல் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவது அவசியம். அவை தொழில் இடங்களில் இருக்கக்கூடிய கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை சக்திகளை மொத்தமாக விரட்டும்.
2. அரளிப்பூ வியாபாரம் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். அதனால் நீங்கள் கடைக்கு செல்லும் பொழுது அரளி பூவை தேய்த்து நெற்றியில் திலாகமாக வைத்துக் கொள்ளலாம். இதன் வழியாக வியாபாரம் சிறப்பாக அமையும்.
3. மிக முக்கிய பரிகாரமாக உங்களுடைய தொழில் வளர்ச்சி அடைவதற்கு நீங்கள் பசுவிற்கு உணவு தானம் வழங்க வேண்டும். முடிந்தால் உங்கள் கைகளாலே பசுவிற்கு உணவு அளித்து வாருங்கள். நிச்சயம் வியாபாரத்தில் சந்திக்க கூடிய தடை வெகு விரைவில் விலகும்.

4. நீங்கள் தொழில் செய்யும் இடங்களில் கோமதி சக்கரத்தை வாங்கி வைப்பதும் ஒரு நல்ல அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும். அதோடு 11 கோமதி சக்கரத்தை நீங்கள் சிவப்பு நிற நூலில் கட்டி அதை கடை வாசலில் கட்டி அதற்கு வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து வந்தால் லட்சுமி தேவியின் பரிபூரண அருளால் உங்களுக்கு ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும்.
5. நீங்கள் தொழில் செய்யும் இடங்களில் வாஸ்து ரீதியாக ஏதேனும் பிரச்சனைகள் இருக்கக்கூடும் என்று நினைத்தால்ஏழு எண்ணிக்கையில் இருக்கக்கூடிய குதிரை படத்தை நீங்கள் கிழக்கு திசையில் மாட்டி வைத்தால் நிச்சயம் வாஸ்து ரீதியாக வரக்கூடிய ஆபத்துகள் யாவும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |