செய்வினை இவர்களை எல்லாம் எளிதில் பாதிக்குமாம்- கவனமாக இருங்கள்
செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் இவையெல்லாம் காலம் காலமாக எதிர்மறை சக்திகளால் வைத்து செய்யப்படும் ஒரு தீங்கு ஆகும். அதாவது ஒருவரை நேரடியாக தாக்க முடியாது என்கின்ற பொழுதில் அவர்களை இவ்வாறான தீய வழியில் அவர்களை முடக்கி காரியங்களை சாதித்துக் கொள்ள இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை நாம் பார்க்கமுடிகிறது.
இதை சிலர் தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல் என்று பல்வேறு பெயர்கள் கொண்டு சொன்னாலும் உண்மையில் இவ்வாறான அமைப்புகள் எந்த நபரை அதிக அளவில் பாதிக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த தீய சக்திகள் மற்றும் செய்வினையானது எவர் ஒருவர் மனதளவில் பலவீனமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு இந்த தீய சக்தியின் உடைய தாக்கம் அதிகளவில் கொடுத்து விடுவதை நாம் பார்க்க முடிகிறது. மேலும் ஜோதிடத்தில் சந்திரன் தான் ஒருவருடைய மனம் மற்றும் உணர்ச்சிகளுக்கு காரணமாக இருக்கிறார்.

எவர் ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் ராகு கேது அல்லது சனி இவைகளுடைய தாக்கங்கள் இருக்கிறதோ அவர்களுக்கு இவ்வாறான செய்வினை ஏவல் பில்லி சூனியம் மற்றும் எதிற்மறை சக்திகளால் தாக்கங்கள் ஏற்பட்டு விடுமோ என்கின்ற பயம் உண்டாகும்.
அதேபோல் எந்த ஒரு வீடுகளில் வாஸ்து சரியில்லாத ஒரு நிலை அல்லது எந்த ஒரு வீடுகளில் உடைந்த கண்ணாடிகள் அல்லது கண்ணாடி பொருட்கள் சுத்தமில்லாத ஒரு நிலை இவ்வாறான போன்ற சூழலில் இருக்கிறது அந்த வீடுகளை செய்வினையானது மிக எளிதாக பாதித்து விடுகிறது.
ஆக ஒருவருக்கு தங்கள் செய்வினை மற்றும் எதிர்மறை சக்திகளால் பாதித்துவிட்டோம் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது அல்லது அவ்வாறான அறிகுறிகள் தோன்றுகிறது என்றால் அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

பரிகாரங்கள்:
1. வீடுகளில் எதிர்மறை சக்திகள் செய்வினை போன்ற தாக்கம் இருப்பதாக எண்ணினால் கடுகு, கருப்பு எள், கற்பூரம், கிராம்பு இவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு நம்முடைய உடலை ஏழு முறை சுற்றி நெருப்பில் விட வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது நமக்கு உண்டான செய்வினை கோளாறுகள் மற்றும் தீய சக்திகள் இருந்தால் விலகுகிறது.
2. பிறகு கோமியம் மற்றும் புனித நீர் இவை இரண்டையும் கலந்து நம்முடைய வீடுகளில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மூலைகளில் தெளித்துவிட்டால் வீட்டில் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட தீய சக்திகளும் விலகிவிடும்.
3. மேலும் வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் இவை எடுத்துக்கொண்டு நம்முடைய கால்கள் மற்றும் முகங்களில் தேய்த்துக் கொண்டால் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய ஆன்மா சுத்தமடையும். அதோடு நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டாலும் இவை நமக்கு ஏற்படக்கூடிய தீய சக்திகளின் தாக்கங்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.
4. மேலும் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பரிகாரமாக ஹனுமன் மந்திரத்தை நம் வீடுகளில் பாராயணம் செய்யும் பொழுது நம் வீடுகளில் சூழ்ந்துள்ள எதிர்மறை ஆற்றல் முற்றிலுமாக விலகி நம்முடைய குடும்பத்தில் நேர்மறை சக்திகள் சூழ்ந்து அதிர்ஷ்டமும் நிம்மதியும் உண்டாகும்.
5. அதோடு ஹனுமன் மந்திரத்தை பாராயணம் செய்து நம்முடைய வலது கை மற்றும் கால்களில் கருப்பு நிற கயிறுகளை கட்டிக் கொள்ளலாம். இவை நம்மை பல தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |