ஆன்மீகத்தை அடைய மௌனத்தின் ஏழு நிலைகள்
ஆன்மிகம் மற்றும் இறைவனை அடைய ஒரே வழி நம்மை அறிந்து நம்மை பக்குவப்படுத்துவது தான்.அந்த பக்குவம் ஆனது எப்பொழுது வரும்? அதாவது மனிதனுக்கு உச்ச கட்ட துன்ப நிலை,உச்ச கட்ட அகங்காரம்,தான் என்ற கர்வம்,இவை எல்லாம் தலை தூக்கி உச்சகட்டமாக செல்லும் பொழுது இறைவன் அவனுக்கு தக்க பாடம் புகுட்ட நினைப்பான்.
அப்பொழுது அவன் எந்த உயரத்தில் தன்னை உயர்த்தி நிறுத்தி வைத்து ஆட்டம் அடினானோ அந்த இடம் நிலையானது அல்ல என்று இறைவன் தக்க பாடம் புகுத்துவர் .
அப்படி இருக்க இறை வழியில் செல்ல ஏழு மௌன நிலைகள் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
நிசப்தம் - வாயை முடிகொண்டு இருப்பது
நிச்சலனம் - வாயை முடி மன சலனத்தை , மனம் சத்தம் போடுவதை நிறுத்துவது
நிக்கலம் - கலங்கம் இல்லாமல் இருக்கும் நிலை, மனதில் உள்ள அழுக்குகள் கலங்கல்கள் இல்லாமல் இருப்பது
நிராமயம் - மயம் இல்லாமல் இருப்பது, சிவமயம், இன்ப மயம் , ஆத்மமயம், கோபமயம், இல்லாமல் இருப்பது
நிர்மலம் - (ஆணவம் , கர்மம் , மாயை) இந்த மும்மலமும் இல்லாமல் இருப்பது
நிஷ்காம்யம் - உலகாயத்த மகிழ்ச்சியில் இருந்து விலகி இருத்தல், உலகத்தில் உள்ள இன்பங்களில் இருந்து விலகி இருப்பது
நிர்குணம் - ஒரு சுவையும் குணமும் இல்லாதது தான்
ஆன்மா, எந்த குணமும் இல்லாமல் இருப்பது!ஆன்மாவாக மாறி போவது
எத்தனை அழகாய் இருக்கிறது இந்த மௌனத்தின் ஏழு நிலைகள்.இந்த ஏழு நிலைகள் நாம் அனுபவித்தால் போதும் இறைவனையும் அடைந்து நம் வாழ்க்கையில் பக்குவம் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |