நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பகவத் கீதையின் முக்கிய வசனங்கள்

By Sakthi Raj Sep 28, 2024 12:30 PM GMT
Report

நாம் அனைவரும் பகவத் கீதை பற்றி கேள்வி பட்டு இருப்போம்.மனிதன் அவன் வாழ்க்கையில் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய படிக்கச் வேண்டிய முக்கிய புத்தகம் பகவத் கீதை.அதாவது மனிதன் இந்த உலகத்தில் அர்த்தமே இல்லாமல் அவன் அவனையே துன்புறுத்தி கொள்ளும் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் அறியாமை.இந்த அறியாமையில் தான் அவன் குழப்பத்தோடு அவன் வாழ்க்கையை எதிர்கொள்கிறான்.அந்த குழப்பத்தில் இருந்து அவன் அவனை தெளிவு படுத்து கொள்ள அவன் கட்டாயம் பகவத் கீதை படிக்கவேண்டும்.பகவத் கீதை ஒரு மனிதனுக்கு வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று கற்று கொடுக்கிறது.

அந்த வகையில் நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பகவத் கீதை வசனத்தை பற்றி பார்ப்போம்.

நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பகவத் கீதையின் முக்கிய வசனங்கள் | Importance Of Bagavat Gita

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல் படுபவனையே கை கூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌ இரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லி கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல, விடா முயற்சியினால்தான்.

11. முன் நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒரு வேளை பின் நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப் படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப் படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பகவத் கீதையின் முக்கிய வசனங்கள் | Importance Of Bagavat Gita

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தை விட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை,இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவை அல்ல.

வீட்டில் உள்ள துர் தேவதைகளை விரட்டும் மணியோசை

வீட்டில் உள்ள துர் தேவதைகளை விரட்டும் மணியோசை


21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகி விட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது மிக இழிவானது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US