வீட்டு விழாக்களில் நாம் தவிர்க்க வேண்டிய முக்கியமான தவறுகள்
இந்துக்கள் வீட்டில் நடைபெறும் எந்த ஒரு விஷேச நிகழ்வு என்றாலும் இந்த மாவிலை தோரணம் இல்லாமல் கண்டிப்பாக நடைபெறாது.அப்படியாக இந்த மாவிலை கட்டுவதற்கு பின்னால் ஒளிந்து இருக்கும் ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்களை தெரிந்து கொள்ளுவோம்.
வீட்டில் விஷேசம் என்றால் உற்றார் உறவினர்கள் அனைவரையும் நாம் அழைப்போம்.அப்படியாக அவர்களுக்கு ஏதுனும் நோய் கிருமிகள் இருக்கலாம்.அவர்களிடம் இருந்து பிறருக்கு தொற்று பரவாமல் இருக்கவும் நாம் இந்த மாவிலை தோரணையை வீட்டு வாசலில் காட்டுகின்றோம்.
மேலும் இந்த மாவிலையில் லட்சுமி தேவி வாசம் செய்கின்றாள். பூஜையின் போது கலசங்களில் உள்ள நீருடன் மாவிலையும் சேர்த்து வைப்பார்கள். பூஜையானது நிறைவுப்பெற்ற உடன் கலசங்களில் உள்ள நீரை மாவிலையின் மூலம் அங்குள்ள பக்தர்களுக்கு தெளிப்பார்கள் மற்றும் சிலர் அந்நீரை அருந்துவார்கள்.
இதனால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் மாவிலையனது கலச நீரில் பிராண வாயுவின் அளவை அதிகப்படுத்துகிறது. மாவிலை தோரணமானது வீட்டில் உள்ள ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால் அந்த பிரச்சனையின் அளவை குறைக்கும்.
மாவிலை தோரணமானது வீட்டில் எதிர்மறை சக்திகள் நுழைவதை தடுக்கின்றது. மாவிலை தோரணமானது வீட்டினுள் வரும் காற்றினை சுத்திகரித்து அனுப்புவதால் வீட்டில் உள்ளோரின் உடல் ஆரோக்கியமானது மேம்படும். மாவிலை என்பது சிறந்த கிருமிநாசினி ஆகும்.
மாவிலையானது விழாக்கள் நடைபெறும் இடங்களில் உள்ள மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்துக்கொண்டு சுற்றுப்புறத்தை சீர் செய்கிறது.
மாவிலையானது விழாக்களில் வருகை தரும் மக்கள் மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் வல்லமை கொண்டது. இன்னொரு சிறப்பம்சம் காய்ந்த மாவிலையானாலும் அதன் சக்தி குறைவது இல்லை.
அதாவது நம்முடைய முன்னோர்களும் நடைமுறைகளுக்கு பின்னால் நிறைய அறிவியல் மற்றும் ஆன்மீக விஷயங்கள் நிறைந்து இருக்கிறது.
ஆனால் அதை நாம் கவனிக்க தவறி நேரமில்லாத காரணத்தினால் கடைகளில் விற்கும் பிளாஸ்டிக் மாவிலை தோரணையை வாங்கி நாம் பயன் படுத்தி வருகின்றோம்.
இதனால் எந்த பயனும் இல்லை.ஆக நாம் செய்யும் விஷயங்களுக்கு பின்னால் ஒளிந்து இருக்கும் உண்மை தன்மையை புரிந்து நாம் பயன்படுத்தினால் அனைவரும் மேன்மை அடையலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |