இன்று கிருத்திகை முருக பெருமானுக்கு நாம் கட்டாயம் வீட்டில் செய்யவேண்டியவை
முருக பெருமானை கார்த்திகை பெண்கள் எடுத்து வளர்த்ததால் அவர்கள் முருகனின் தாய் என்று உயர்ந்த பண்பை பெற்றனர்.மேலும்,கார்த்திகை பெண்களின் தாய்மையை போற்றும் விதமாக கார்த்திகை பெண்களின் பெயரிலேயே முருகன், கார்த்திகேயன் என்று அழைக்கப்படுகிறார்.
அதுமட்டுமல்ல கார்த்திகை பெண்களின் நாளான கிருத்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் குழந்தை பாக்கியம்,திருமண தடை விலகி வீட்டில் சந்தோசம் பெருகும்.
இன்று கிருத்திகை ஆதலால் இன்றைய நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்க்கையில் வேண்டிய அனைத்தும் முருகன் அருளிச்செய்வார் என்பது நம்பிக்கை.
விரதம் இருக்கும் முறை
முருகனின் பரிபூர்ண அருள் கிடைக்கும் கிருத்திகை தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்களை சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் படத்திற்கு நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
மேலும்,அன்றைய தினத்தில் கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.
மேற்கண்ட முறையில் முருகனை கிருத்திகை தினத்தில் வழிபட்டு முடித்ததும், அருகிலுள்ள முருகன் கோயிலுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு.
இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் வாழ்க்கையில் மேன்மை ஏற்படும். பின்னர் வீட்டிற்கு சென்று பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.
முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்க கிருத்திகை விரதத்தை கடைப்பிடிப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |