எந்தெந்த தெய்வங்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்

By Sakthi Raj Sep 21, 2024 12:30 PM GMT
Report

வீட்டில் மிக முக்கியமா அறையாக பூஜை அறை கருதப்படுகிறது.அதில் விளக்கு பூஜை சாமான்கள் போக,நமக்கு மனசுக்கு பிடித்த தெய்வ படங்களை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.நமக்கு மனசுக்கு பிடித்த அனைத்து தெய்வங்களின் படங்களையும் வைத்து வழிபட வேண்டும் என்று தான் எல்லோருடைய ஆசை.அப்படியாக வீட்டில் எந்தெந்த தெய்வங்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய தெய்வ படங்களில் குல தெய்வத்தின் படம் மிக முக்கியமானது.பிற தெய்வங்கள் கிரக சூழ்ச்சியால் விலகி போனாலும் குலதெய்வம் நம்மை எந்த காலத்திலும் காப்பாற்றும் என்பது நம்பிக்கை.

அவர்களை தான் குலம் காக்கும் தெய்வங்கள். குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது. அடுத்ததாக அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.இதுவும் அவர்கள் வீட்டிற்கு நன்மையை உண்டாக்கும்.

எந்தெந்த தெய்வங்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம் | Pooja Room God Pictures Tips

குலதெய்வத்திற்கு அடுத்த படியாக நம்மை கை கொடுத்து காப்பாற்றுவது நம்முடைய இஷ்ட தெய்வங்கள் ஆகும். அடுத்ததாக முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் கண்டிப்பாக வைத்து வழிபட வேண்டும்.அவர் தான் காரிய தடைகளை நீக்கி நமக்கு வெற்றி தருபவர்.

மேலும்,குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். அவ்வாறு வழிபாடு செய்வதால் நீண்ட நாள் குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வார்கள் என்பது நம்பிக்கை.மேலும் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இவரை வைத்து வழிபடுவதால் அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.

அடுத்ததாக,மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும்.திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை தருபவரும் இவரே.

மேலும் ஒவ்வொரு குடும்பத்தின் இல்லறம் நல்லறமாக நடக்க அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம்.குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வணங்க வேண்டியவர் இவரே. குடும்பத்தில் பிரச்சனை ,பிரிந்த தம்பதியர் ஒன்று சேர இவரை வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர்.

எந்தெந்த தெய்வங்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம் | Pooja Room God Pictures Tips

ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.

குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.

தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே. பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.

ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.

எந்தெந்த தெய்வங்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம் | Pooja Room God Pictures Tips

லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். . இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.

ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.

சரஸ்வதி தேவியின் படம் கட்டாயமாக வீட்டில் இருக்க வேண்டும். இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.

அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் வியாபாரத்தில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும். மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.

கேட்டதை கொடுக்கும் புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம்

கேட்டதை கொடுக்கும் புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம்


துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.

அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும்.வீட்டில் உள்ள தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும்.குடும்பத்தில் வளமான, நிம்மதியான வாழ்க்கை உண்டாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US