இன்றைய ராசி பலன்(26-03-2025)
மேஷம்:
இன்று உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகலாம். சில சங்கடங்கள் உருவாகலாம். இறைவழிபாடு அல்லதை தியானம் செய்வது மன அமைதி கொடுக்கும். நன்மையான நாள்.
ரிஷபம்:
இன்று பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். கடந்த கால நினைவுகள் உங்களுக்கு சில சங்கடத்தை கொடுக்கலாம். அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
தாய் உடல் நிலையில் கவனம் அவசியம். அலைச்சல் உண்டாகும். சிலருக்கு மன ரீதியாக சில சவால்களை சந்திக்க நேரிடும். குலதெய்வ வழிபாடு துணை உறுதுணையாக அமையும்.
கடகம்:
மனதிற்கு பிடித்தவர்களிடம் பேசி மகிழ்வீர்கள். சகோதரி வழி உறவால் ஆதாயம் கிடைக்கும். ஒரு சிலருக்கு மதியம் சில பதட்டம் உண்டாகலாம். கவனம் அவசியம்.
சிம்மம்:
செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். பதட்டமில்லாமல் செயல்பட்டு லாபம் அடைவீர்.வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
கன்னி:
இன்று தேவை இல்லாத பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் சில சிக்கலைகளை சந்திக்கலாம். மனதில் நம்பிக்கை பிறக்கும்.
துலாம்:
இன்று உங்கள் மனம் பல குழப்பங்களால் சூழ படும். பெற்றோர்கள் உடல்நலன் பற்றி கவலை கொள்வீர்கள். தாய் மாமன் வழியாக நல்ல செய்தி கிடைக்கும். நட்பு வட்டாரம் விரிவு அடையும்.
விருச்சிகம்:
கவனமாக செயல்படுவதால் வேலைகள் நடக்கும். வருமானம் திருப்தி தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. தாய்வழி உறவுகளால் வேலை முடியும். செயல் லாபமாகும்.
தனுசு:
இன்று வேலை பளு அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் மேலோங்கும். கடன் பிரச்சனையால் சில துன்பங்கள் சந்திக்கக்கூடும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் நன்மையாக அமையும்.
மகரம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். விருப்பம் நிறைவேறும். நினைத்த வேலை நடக்கும். சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.
கும்பம்:
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உங்கள் வளர்ச்சிக்கு வழி தெரியும் நாள். தொழிலில் இருந்த தடை விலகும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.
மீனம்:
சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதையும் யோசித்து செயல்படுவதால் நன்மை பெறுவீர்கள். மன அழுத்தம் குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |