நாளைய ராசிபலன் (10-09-2026)

Report

 மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கை துணையுடன் ஒரு நல்ல புரிதல் உண்டாகும். வேலை தொடர்பாக இவர்கள் திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். பொருளாதார முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்:

இன்று வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு உடல் ரீதியாக சில சங்கடங்கள் வந்து செல்லும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். மதியமேல் நற்செய்தி வந்து சேரும்.

மிதுனம்:

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் கவனத்தோடு செயல்படுவது அவசியம். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளும் எடுக்க வேண்டாம். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும்.

கடகம்:

தொழில் ரீதியாக ஒரு சில சங்கடங்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். பிள்ளைகளின் படிப்பில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்:

எதிர்காலம் தொடர்பான பயம் உருவாகும். வழக்கு விஷயங்களில் நீங்கள் மிகுந்த அக்கறையோடு செயல்பட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் விலகி முன்னேற்றம் உண்டாகும்.

2026 குரு பெயர்ச்சி: துலாம் ராசிக்கு 10-ல் குரு இருப்பதால் பதவி பறிப்போகுமா?

2026 குரு பெயர்ச்சி: துலாம் ராசிக்கு 10-ல் குரு இருப்பதால் பதவி பறிப்போகுமா?

கன்னி:

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளையும் ஆதரவையும் பெறுவீர்கள். திருமண தொடர்பான விஷயங்களை நீங்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும்.

துலாம்:

இன்று மனதில் குழப்பமும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

விருச்சிகம்:

தொழில் ரீதியாக நீங்கள் முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். காவல் துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாளாக அமையப் போகிறது. குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

தனுசு:

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்திற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

2026 குரு புஷ்ய யோகம்: ஜூன் 18 முதல் ராசிகளுக்கு பண மழை தானாம்

2026 குரு புஷ்ய யோகம்: ஜூன் 18 முதல் ராசிகளுக்கு பண மழை தானாம்

மகரம்:

காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும். ஆன்மீகத்தில் உங்களுக்கு அதிக ஈடுபாடு உண்டாகும். ஒரு சிலருக்கு நெருங்கியவர்களால் மனக்கசப்புகள் ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்:

வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பீர்கள் நன்மையான நாள்.

மீனம்:

குழந்தைகள் விஷயங்களில் நீங்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். சொந்தங்களால் ஏற்பட்ட விரிசல் விலகும். புதிய சொத்து சேர்க்கை உருவாகக்கூடிய காலகட்டம் ஆகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US