நாளைய ராசிபலன் (19-06-2026)

Report

மேஷம்:

உறவினர்கள் வழியாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சமுதாய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். உயர்கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

ரிஷபம்:

இன்று இளைய சகோதரர்களால் நல்ல அனுகூலம் உண்டு. வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். கற்பனை திறன் மேம்படும். லாபம் நிறைந்த நாள். உயர்வு காணும் நாள்.

மிதுனம்:

மனதில் நீண்ட நாட்கள் நினைத்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. அரசு வேலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

கடகம்:

மனதில் புதிய லட்சியம் பிறக்கும். எதிலும் அவசரம் இன்றி செயல்பட்டால் நினைத்ததை சாதிக்கலாம். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்.

யாருடைய விதி எங்கே? எப்படி முடியும்? எப்படி தெரிந்து கொள்வது

யாருடைய விதி எங்கே? எப்படி முடியும்? எப்படி தெரிந்து கொள்வது

சிம்மம்

மனதில் பழைய நினைவுகளால் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். அரசு தொடர்பான விஷயங்களில் தாமதங்கள் குறையும். வியாபாரம் தொடர்பாக திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் நிலை வரலாம்.

கன்னி:

எந்த வேலையும் திட்டமிட்டு செய்வதால் மட்டுமே நீங்கள் காரியத்தை சாதிக்க முடியும். பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். சிந்தனை மேம்படும்.

துலாம்:

பணம் தொடர்பான நெருக்கடிகள் விலகும். உடன் பிறந்தவர்களால் சில அலைச்சல் சந்திப்பீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றும் சூழ்நிலை உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்:

ஆன்மீக தொடர்பான பணிகளில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். கணவன் மனைவியிடையே நல்ல நெருக்கம் உண்டாகும். மனதில் இருக்கும் குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

தேன் போல் பேசியே காரியத்தை சாதிக்க கூடிய ராசிகள் யார் தெரியுமா ?

தேன் போல் பேசியே காரியத்தை சாதிக்க கூடிய ராசிகள் யார் தெரியுமா ?

தனசு:

மனதில் இனம் புரியாத குழப்பங்களும் கவலைகளும் வரும். கொடுக்கல் வாங்கலில் நீங்கள் மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டும். வேலையில் அனுசரித்து செல்வது அவசியம்.

மகரம்:

மாணவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் ஒரு காரியத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.

கும்பம்:

சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகளை பெறுவீர்கள். விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாள்.

மீனம்:

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உயரும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. முக்கியமான ஆவணங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US