இன்றைய ராசி பலன்(25-07-2025)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு வேலையில் சில சங்கடங்கள் உருவாகலாம். மதியம் மேல் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். முன்னோர்களை வழிபாடு முன்னேற்றம் கொடுக்கும்.
ரிஷபம்:
இன்று தொழில் வட்டாரதத்தில் உங்கள் மதிப்பு உயரும். உடல் உபாதைகள் சரி ஆகும். நண்பர்களுடன் முழு நேரத்தையும் செலவு செய்வீர்கள். உறவினர்களின் உதவியும் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
இன்று அவசர முடிவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் நன்மைகள் உண்டாகும்.
கடகம்:
தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடை ஏற்படும். சிந்தித்து செயல்படுவதால் சிரமம் குறையும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. அணுகுமுறை லாபம் தரும்.
சிம்மம்:
இன்று தேவை இல்லாத செலவுகளை சந்திக்கும் நாள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
கன்னி:
எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். சங்கடத்தில் இருந்து விடுபடுவீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
துலாம்:
உங்களுக்கு வியாபாரத்தில் நினைத்த லாபம் கிடைக்கும். விவேகத்துடன் செயல்பட்டு நன்மைகளை செய்வீர்கள். மனதில் தெளிவு உண்டாகும். குடும்ப நெருக்கடிகள் விலகும்.
விருச்சிகம்:
உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். பெரியோர் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வரும். தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையை சாதுர்யமாக கையாள்வீர். முயற்சிக்கு ஏற்ற பலன் உண்டு.
தனுசு:
இன்று பிள்ளைகளைப் பற்றி பெருமை அடைவீர்கள். சொந்தங்கள் வீட்டிற்கு செல்லும் நாள். மனதிற்கு பிடித்த வேலையை செய்து மகிழ்வீர்கள். செய்யும் வேலைகளில் நிதானம் தேவை.
மகரம்:
முடிந்த வரை உங்கள் சொந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். நண்பர்களால் வியாபாரத்தில் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணையின் ஆலோசனை பெற்று நடப்பீர்கள்.
கும்பம்:
உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு சாதகமாகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும்.
மீனம்:
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நெருக்கடிகள் கொடுத்தவர் விலகி செல்வார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும் நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







