நாளைய ராசி பலன் (03-04-2026)
மேஷம்:
நண்பர்கள் வழியே முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றியை கொடுக்கும். மறைமுக எதிரிகள் தொல்லை விலகும்.
ரிஷபம்:
பயணம் தொடர்பாக சில அலைச்சலை சந்திப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடிய நாள். புதிய வாகனங்கள் வாங்குவதை பற்றி யோசிப்பீர்கள். கடன் பிரச்சினை விலகும்.
மிதுனம்:
இன்று தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. மனதளவில் இருந்து வந்த தயக்கம் விலகும். பாராட்டுக்கள் கிடைக்கும் நாள்.
கடகம்:
வெளியூர் செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு பொருளாதார நெருக்கடிகள் வரலாம். மதியம் மேல் வீடுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
சிம்மம்:
தொழில் ரீதியாக இன்று முக்கிய நபர்களை சந்திக்க நேரலாம். வாழ்க்கை ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வாழ்க்கை துணையிடம் சற்று நிதானமாக பேசுவது நல்லது.
கன்னி:
இன்று குடும்பத்தில் மிக பெரிய அளவில் பிரச்சனையை சந்திக்கலாம். வேலைக்காக நீங்க முக்கிய முடிவுகள் எடுக்க நேரும். குழந்தைகள் நலனில் மிகவும் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.
துலாம்:
இன்று சுற்றி உள்ளவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வேலையில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும் நாள்.
விருச்சிகம்:
மருத்துவ ரீதியாக நீங்கள் முக்கிய நபர்ககின் ஆலோசனை பெறுவீர்கள். வெளிநாடு தொடர்பாக நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
தனுசு:
பிள்ளைகள் எதிர்காலம் வாழ்க்கையை பற்றிய கவலை மற்றும் பயம் விலகும். திடீர் பணவரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் முக்கியமான நபர்களிடம் சில மன கசப்புகள் வரலாம்.
மகரம்:
இன்று சிறு சிறு பொய் பேசுவதை தவிர்த்து விடுங்கள். திருமணத்தில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். நெருங்கிய சொந்தங்களிடம் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
கும்பம்:
அலுவலகத்தில் உங்களுக்கு தேவையான விஷயங்களை செய்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் பற்றிய முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். பெற்றோர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
மீனம்:
வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தாய் வழி உறவுகளால் இருந்து வந்த கசப்புகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |